எந்த விஷயத்தில் வைராக்கியமாக இருக்க வேண்டும்?
நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் நிறைய தேவை அற்ற விஷயங்கள் அதிகம் இருக்கிறது.அதில் முதலில் பிடிவாதமும் வைராக்கியமும் தான் காரணம்.
இவை இரண்டும் வைத்து கொண்டு நமக்கு எதுவும் கிடைக்க போவது இல்லை.அப்படியாக ஒரு மனிதன் எந்த இடத்தில் வைராக்கியம் ஆகவும் பிடிவாதம் ஆகவும் இருக்க வேண்டும் என்பதை பற்றி பகவான் கிருஷ்ணர் சொல்லும் பதிலை கேட்போம்
பக்தன் : கிருஷ்ணா, நான் அவன் வீட்டிற்கு செல்ல போவதில்லை. அவனிடம் பேச போவதும் இல்லை. இந்த விஷயத்தில் வைராக்கியத்துடன் இருக்க போகிறேன் என்கின்றான்.
கிருஷ்ணா : அதற்கு பெயர் வைராக்கியம் அல்ல. வீண் பிடிவாதம் அனைவரும் வைராக்கியத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதனால் யாருக்கு என்ன பயன்? உன் மனதில் வெறுப்புதான் அதிகமாகுமே தவிர மனதில் அன்பு தோன்றாது. உன்னுள் இருக்கும் ஞானத்தை அறிய மாட்டாய். என்னை விட்டு விலகியே செல்வாய்.
பக்தன் : அப்படியென்றால் வைராக்கியம் என்று எதை கூறுகிறார்கள் ? கிருஷ்ணா : வைராக்கியம் என்பது உலக பற்றுகளை அறுத்து என்னிடம் மனதை அர்பணிப்பதே ஆகும்.
பிடிவாதம் இருந்தால் மனதில் வெறுப்புதான் தோன்றும். மாறாக வைராக்கியத்துடன் இருந்தால் ஆனந்தம் பெருகும்.
வெற்றியும் பெறுவாய். நான் உலக விஷயங்களில் உள்ள வெற்றியை பற்றி கூறவில்லை. நிரந்தரமான என் உலகத்திற்கு வருவதற்காக உலக மாயையை வெற்றி கொள்வாய் என்று கூறுகிறேன்.
ஆக நாம் நல்ல முறையில் வாழவேண்டும் என்றால் நம் மனதில் வெறுப்புகள் இல்லாமல் அன்போடு இருக்க வேண்டும்.அப்பொழுது நாம் நினைத்ததை அடையமுடியும் சாதிக்க முடியும் இறைவன் நம்மிடத்தில் வருவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |