இந்த 3 ராசிகள் வைரம் அணிந்தால் பொருளாதார இழப்புகள் வருமாம்
பொதுவாகவே வைரம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வைரத்தின் ஜொலிப்பிற்கு அனைவரும் ஒரு ரசிகர்கள் தான். ஆனால் இந்த வைரமானது எல்லோரும் அணிந்து கொள்ளலாமா? என்று கேட்டால் ஜோதிட ரீதியாக சில ராசி அமைப்புகள் படி ஒரு குறிப்பிட்ட சில ராசிகள் வைரம் அணிந்தால் அவர்களுக்கு நன்மையும், குறிப்பிட்ட சில ராசிகள் வைரம் அணிந்தால் அவர்களுக்கு கஷ்டங்களையும் கொடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக எந்த மூன்று ராசியினர் வைரம் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் வைரம் அணிவதை தவிர்த்துக் கொண்டால் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் வைரம் அணியும் பொழுது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல்களை இவர்கள் சந்திக்க நேரலாம் என்றும் சொல்கிறார்கள். ஆதலால் முடிந்தவரை இவர்கள் வைரம் அணிவதை தவிர்த்துக் கொள்ளலாம் அல்லது ஒரு நல்ல ஜோதிடரை பார்த்து அவர்களுடைய கிரக அமைப்புகளை கொண்டு இவர்கள் வைரம் அணிந்து கொள்ளலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியினரும் வைரம் அணிவதை தவிர்த்துக் கொள்ளலாம். காரணம் சிம்ம ராசியினருக்கு வைரம் சமயங்களில் துரதிர்ஷ்டம் கொடுப்பதாக சொல்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நிறைய பொருளாதார ரீதியாக சங்கடங்களும் குடும்பத்தில் மன மகிழ்ச்சி இல்லாமல் இருக்க கூடிய நிலை போன்றவை இவர்கள் சந்திக்க நேரலாம் என்று சொல்வதால் சிம்ம ராசியினர் வைரம் அணிவதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்று சொல்கிறார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் வைரம் அணியும்பொழுது சற்று ஆலோசித்து அணிவது நன்மை அளிக்கும். காரணம் விருச்சிக ராசியினருக்கு வைரம் அணியும் பொழுது அவர்களுக்கு எதிர்பாராத உடல் ஆரோக்கியம் குறைபாடுகளும், கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகளையும் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் இவர்கள் வைரம் அணிய வேண்டும் என்று மிகவும் விருப்பம் கொண்டால் இவர்களுடைய கிரக அமைப்புகள் நன்றாக ஆராய்ந்து பார்த்த பிறகு அணிய வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |