ஆடி மாதத்தில் ஏன் சற்று கவனமாக இருக்க வேண்டும்
ஆடி மாதம் பிறந்து ஊரெங்கும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.ஆடி மாதத்தில் ஆன்மீகத்தில் பல வரைமுறைகளை கடைபிடிக்கவேண்டி இருக்கிறது.
மேலும் ஆடி மாதத்தில் நிறைய அச்சிரயம் மிகுந்த சிறப்புகள் இருக்கிறது.அப்படியாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் மட்டுமல்ல.
மகாபாரத போர் நடைபெற்ற மாதம் என்றும் சொல்வார்கள். அதாவது அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிந்தது.
தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற இந்த போரானது ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி, ஆடி 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதம் பஞ்ச பாண்டவர்களுக்கு போருக்கான பயணத்தின் தொடக்கத்தையும், முக்கிய நிகழ்வுகளையும் கொண்ட ஒரு சிறப்பான மாதமாக கருதப்படுகிறது.
அதனால் ஆடி மாதத்தில் கொஞ்சம் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |