சாப்பிடும்போது உப்பு கேட்கும் பழக்கம் இருக்கிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்..
வீடுகளில் உணவு எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு சிலருக்கு ஒரு பழக்கம் இருக்கும். அதாவது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது உப்பு கொண்டு வர சொல்லி கேட்பார்கள். இவ்வாறு கேட்பதற்கு பின்னால் சாஸ்திர ரீதியாக முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய சாஸ்திரத்தில் உப்பு என்பது வெறும் உணவின் சுவையை கூட்டுவது மட்டும் அல்லாமல் அவை கிரகங்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. அதாவது உப்பு சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ளது.

அப்படியாக ஒருவர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது உப்பு கேட்பது என்பது அந்த நபரின் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருப்பதை குறிக்கிறது. அதோடு அந்த நபரின் ஆழ்மனதில் அமைதியின்மையை அவை காட்டுகிறது.
அதோடு பழங்காலத்தில் பெரியவர்கள் எப்பொழுதும் உணவில் தனியாக உப்பு சேர்ப்பது இல்லை. காரணம் ஆயுர்வேதத்தின் படி சமைக்காத உப்பு நம் உடலின் சமநிலையை குழைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதனால் அவை ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல் நம் ஆற்றலையும் பாதிக்கிறது. அதோடு சமைத்த உணவின் மீது உப்பு தூவுவது என்பது உடலில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்ககூடும் என்று சொல்லப்படுகிறது.
அதோடு வாஸ்து மற்றும் ஜோதிடத்தில் சாப்பிடும் பொழுது உப்பு அதிகமாக கேட்கும் பொழுது அவை வீட்டின் நேர்மறை ஆற்றலை பாதிக்கிறது. இதனால் குடும்பத்தில் குழப்பம், வீண் வாக்கு வாதம் சண்டை ஏற்படலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |