இந்த ஒரு சாபம் மட்டும் வாங்கவே கூடாது - பேரழிவு நிச்சயமாம்
புராணங்களில் இருந்தே சாபம் என்று ஒரு வார்த்தையின் பாதிப்புகளை பார்த்து வருகிறோம். அப்படியாக சாபம் என்பது 13 வகையில் இருக்கிறது. இந்த 13 சாபம் மனிதனை பல விதங்களில் மிகுந்த துன்பத்திற்கு தள்ளுகிறது. மேலும் இந்த சாபமானது சிலருக்கு பல பிறவிகள் வரை தொடரும் நிலை இருக்கிறது என்று சாத்திரங்களிலும் சொல்லப்படுகிறது.
அப்படியாக, 13 வகையான சாபங்கள் இருந்தாலும் இந்த ஒரு சாபங்களை மட்டும் நாம் வாங்க கூடாது என்று சொல்கிறார்கள். இந்த சாபங்களை நாம் பெற்றுவிட்டால் நிச்சயம் மிகப்பெரிய பேரழிவும் ஆபத்தும் நம் வாழ்க்கையில் சந்திக்க நேரமென்று சொல்கிறார்கள்.
அதுதான் பெண் சாபம். அதாவது இந்த பெண்கள் வழியாகத்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்திலும் சிவனில்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவனும் இல்லை என்பதே போல, பெண் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை.

இந்தப் பெண்ணினுடைய சாபத்தை எவர் ஒருவர் பெற்றாலும் நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதி என்பது தங்குவதில்லை. அப்படியாக ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் 6, 8, 12 ஆம் இடங்களில் சந்திரன் நீசம் பெற்று இருந்தாலும் அல்லது மறைந்து இருந்தாலும் பெண்களுடைய சாபம் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இவர்களுக்கு இந்த பெண்களுடைய சாபம் ஆனது இந்த பிறவியில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அவமானங்களை பெற்று கொடுத்து விடும். வாழ்க்கையில் பல தடைகளை மீறிய ஒரு முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு முன்னேற்றமே காண முடியாத நிலை கூட வரலாம்.
இவர்களுக்கு பெண்கள் வழியாகத்தான் நிறைய தொந்தரவுகளும் சந்திக்க நேரும். இந்த பெண் சாபம் ஆனது அந்த தனி நபரை மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்ப வாரிசையே பாதித்துவிடும்.

அந்த வகையில் தெரியாமலும் ஒரு பெண்ணினுடைய சாபம் பெற்றிருந்தால் அவர்கள் பட்டுக்கோட்டை அருகில் இருக்கக்கூடிய அத்திக்கோட்டையின் ஊரில் சப்த கன்னி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுடைய பெண் சாபம் ஆனது நீங்குவதற்கு ஒரு நல்ல அருள் கிடைக்கும்.
அதே போல் ஏழு வயதிற்கு குறைவாக இருக்கக்கூடிய ஏழை பெண் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்தாலும் பெண்களுடைய சாபம் நீங்கும். அதோடு அருகில் இருக்கக்கூடிய கோவில்களில் சப்த கன்னிகளுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம்.
சப்த கன்னிமார்களுக்கு பாவாடை வாங்கி கொடுத்தும் அதனை சாற்றி வழிபாடு செய்தாலும் பெண்களால் ஏற்படக்கூடிய சாபங்கள் அனைத்தும் விலகி நிவாரணம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |