கணவருக்கு அதிர்ஷ்ட தேவதையாக இருக்கும் பெண்கள் யார் யார்னு தெரியுமா?
நியூமராலஜி நமது வாழ்க்கையில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், எந்த தேதியில் பிறந்த பெண்கள் கணவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். அதாவது 25 ஆம் தேதி ஒருவர் பிறந்திருந்தால், அந்நபருக்குரிய எண் 2+5 = 7 ஆகும்.
இப்படிப்பட்ட எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் அவர்களது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவை எந்தெந்த தேதியில் பிறந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷட தேவதையாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
பிறந்த தேதி 1
இந்த தேதியில் பிறந்த பெண்கள் இயற்கையான தலைவர்களாகவும், லட்சியம் மிகுந்தவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் இருப்பார்கள்.
ஆணின் வாழ்க்கையில் நுழையும் போது, கணவருக்கு தொழில் வளர்ச்சி, அங்கீகாரம், சமூக அந்தஸ்தை கொண்டு வருமாம். கணவர்கள் எதையும் தைரியமாக எடுத்து செய்வதற்கு ஊக்குவித்து, வெற்றியடைய வைப்பார்களாம்.
பிறந்த தேதி 5
இந்த தேதியில் பிறந்த பெண்கள் துடிப்பானவர்களாகவும், வலுவான தகவல் தொடர்பு திறன்களைக் கொண்டராகவும், கணவரின் முன்னேற்றத்திற்காக துடிப்புடனும் இருப்பார்கள்.
முக்கியமாக இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரை வணிகத்தில் செழித்து வளர உதவுவார்கள்.
பிறந்த தேதி 15
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பது மட்டுமின்றி, தங்கள் கணவருக்கு நிதி செழிப்பையும் தருகிறார்கள். இந்த பெண்கள் தங்கள் கணவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறார்கள்.
பிறந்த தேதி 28
இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகுந்த லட்சியத்தை கொண்டராகவும், ஆணின் வாழ்க்கையில் செழித்து வளரவும் உதவுவார்கள். கணவரையும் ஒரு லட்சியவாதியாகவும் மாற்றுவார்கள்.
மேலும் இந்த பெண்கள் தங்கள் கணவருக்கு தலைமைத்துவ வாய்ப்புகளையும், நிதி வெற்றியையும் ஈர்க்கிறார்கள்.
பிறந்த தேதி 29
இந்த தேதியில் பிறந்த பெண்கள் நல்ல ராஜதந்திரம், உணர்ச்சி ரீதியான உள்ளுணர்வு கொண்டவர்கள். இவர்கள் கணவர்கள் ஆதரிக்கப்படுவதாகவும் நேசிக்கப்படுவதாகவும் உணர வைக்கிறார்கள்.
அதோடு இவர்கள் தங்கள் கணவரை உள்ளுணர்வு மற்றும் பொறுமையுடன் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவுகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







