இந்த 3 ராசியில் பிறந்த பெண்களிடம் ஆளுமை திறன் அதிகம் இருக்குமாம்.. யார் தெரியுமா?
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் என்று தான் சொல்லுவார்கள். ஆனால் ஒரு சில பெண்களிடம் நாம் அற்புதமான ஆளுமை ஆற்றலை பார்க்க முடியும். அந்த ஆளுமை பிற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடியதாக இருக்கும்.
அதேபோல் தேவையில்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இந்த பெண்களிடம் யாரும் செய்ய முடியாது. நெருப்பு போல் இருப்பார்கள். அப்படியாக எந்த ராசியில் பிறந்த பெண்களிடம் இயற்கையாகவே ஆளுமை பண்பு அதிகம் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர்களிடத்தில் அதிக அளவிலான அறிவாற்றல் இருக்கும். அந்த அறிவாற்றலுடன் சேர்ந்து மிக புத்திசாலியான ஆளுமை பண்பும் இவர்களிடத்தில் காணப்படும்.
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்குவதால் எந்த வேலையாக இருந்தாலும் அந்த இடத்தில் இவர்கள் தான் முக்கிய பொறுப்பு வகிக்கக்கூடிய இடத்தில் இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசி என்றாலே நடுநிலையை குறிக்கக்கூடியது. அதனால் இந்த நடுநிலையே இவர்களுக்கு ஒரு ஆளுமை தோற்றத்தை கொடுத்து விடுகிறது.
இவர்களிடத்தில் எதையும் சரியாக ஆராய்ந்து பேசக்கூடிய பக்குவமும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய மனநிலையும் இருப்பதால் இவர்களின் ஆளுமை திறன் கொண்டு இவர்கள் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று விடுகிறார்கள்.
மீனம்:
மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவர். குரு பகவான் தான் ஒரு மனிதனுக்கு நன்மை தீமையை கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு ஆசிரியர். ஆக மீன ராசியில் பிறந்த பெண்கள் ஒருவரை வழி நடத்துவதில் மிகச்சிறந்தவராக இருப்பார்கள்.
அதாவது பிறரை வழிநடத்தக் கூடிய ஆளுமை இவர்களிடத்தில் பிறவியிலே இருப்பதால் மீன ராசியில் பிறந்த பெண்களிடம் எல்லோரும் பேசுவதற்கு சற்று தயக்கம் காட்டுவதையும் நாம் பார்க்கலாம். இவர்களுடைய ஆளுமை திறன் யாரும் எதிர்பாராத நேரத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டு எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய தன்மையில் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |