2026: நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய ராசிகள்.. ஏன் தெரியுமா
எப்பொழுதுமே நம்முடைய வாழ்க்கையில் துரோகம் என்பது நம்முடைய நெருங்கிய நபர்களிடத்தில் இருந்தே நாம் சந்திக்க கூடிய ஒரு மிகப்பெரிய வலியாக இருக்கிறது. அந்த வகையில் நண்பர்கள் என்னதான் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களும் மனிதர்கள் தான், அவர்கள் மன நிலையிலும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் செய்வது அறியாத ஒரு எதிர்மறை எண்ணங்கள் நம் மீது தோன்றக்கூடும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஒரு சில ராசிகளிடம் நீங்கள் சற்று கவனமாகவும் அவர்களை விட்டு ஒரு தூரமான நிலையிலும் இருங்கள். காரணம் அவர்களுக்கும் கிரகங்கள் சரியில்லாத காரணத்தினால் உங்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றாலும் கிரகங்கள் அவ்வாறான நிலைக்கு அவர்களை தள்ளக்கூடிய அமைப்பு இருப்பதால் இந்த ராசிகள் நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:
மிதுன ராசியினர் எப்பொழுது மனக்குழப்பத்தில் இருக்கக்கூடியவர்கள். அது மட்டும் அல்லாமல் இவர்கள் எவ்வளவுதான் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் சில நேரங்களில் ஒரு மிகப்பெரிய சிக்கலில் இவர்களுடைய ஆசையால் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
நண்பர்களுடன் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மிகவும் நிதானமாக அந்த நண்பரை பற்றி ஆலோசனை செய்த பிறகு நீங்கள் தொடங்க வேண்டும்.
கடகம்:
கடக ராசியினர் உணர்வு ரீதியாக இவர்களுக்கு ஒரு சரியான நிலைத்தன்மை இருக்காது. அதனால் இவர்களை தெரியாதவர்கள் இடத்திலும் கூட நெருங்கிய பழக்கம் கொண்டு காலம் கடந்த பிறகே அவர்களுடைய உண்மை முகத்தை அறியக்கூடிய நிலையில் இருப்பார்கள்.
அதனால் 2026 ஆம் ஆண்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் நண்பர்களுடன் கூட்டமைப்பு கொண்டு தொடங்குவதை தவிர்த்து விடுங்கள். தேவை இல்லாமல் உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதுவே உங்களுக்கு எதிராக அமையக்கூடும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டு தான் இருப்பினும் இவர்கள் சில நேரங்களில் அதிகப்படியான சந்தோஷத்தில் இருந்தால் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்கள்.
அந்த வகையில் நீங்கள் இந்த ஆண்டு நண்பர்களுக்காக ஏதேனும் ஒரு முக்கியமான காரியங்களில் ஈடுபட போகிறீர்கள் என்றால் பலமுறை உங்களுடைய வேலை மற்றும் வாழ்க்கையை கருத்தில் கொண்டு பிறகு அந்த முடிவை எடுங்கள். நண்பர்களுக்காக எந்த ஒரு ஆலோசனையும் நீங்கள் இந்த ஆண்டு எடுப்பது தவிர்ப்பது உங்களுடைய நட்பை பாதுகாக்க கூடிய ஒரு அமைப்பை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |