இந்த ராசியில் பிறந்த பெண்கள் மாமியார் வீட்டில் ராணி போல் வாழ்வார்களாம்

By Sakthi Raj Feb 23, 2026 05:30 AM GMT
Report

நம்முடைய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் அவர்களுடைய பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செல்லக்கூடிய நடைமுறையை பின்பற்றி வருகின்றோம். ஒரு சிலருக்கு பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள், ஆனால் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியே இருக்காது.

அதேபோல் ஒரு சிலருக்கு பிறந்துவீட்டில் கஷ்டங்கள் இருந்தாலும் புகுந்த வீட்டில் நல்ல மகிழ்ச்சியான நிலையை கொடுத்து விடுகிறது. இதற்கெல்லாம் அவர்களுடைய ராசி அமைப்பு, ஜாதக அமைப்பு எல்லாம் காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் எந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு மாமியார் வீட்டில் ராணி போல் வாழக்கூடிய அமைப்பு இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மாமியார் வீட்டில் ராணி போல் வாழ்வார்களாம் | Women In This Zodiac Will Be Happy After Marriage

வாழ்க்கையில் தவறியும் மற்றவர்களிடம் பகிரவேக்கூடாத 8 விஷயங்கள்

வாழ்க்கையில் தவறியும் மற்றவர்களிடம் பகிரவேக்கூடாத 8 விஷயங்கள்

மேஷம்:

மேஷ ராசி பெண்கள் பிறந்த வீட்டில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். புகுந்த வீட்டில் இவர்களுக்கு நிறைய வேலை பளு இருந்தாலும் இவர்களுடைய ராஜ்ஜியம் தான் அங்கு நடக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசி பெண்கள் பிறந்த வீட்டில் கவலையில்லாமல் இருந்திருப்பார்கள். ஆனால் புகுந்த வீட்டில் கவலைப்படாத நாள் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் பிறந்து வீட்டில் இன்பம் துன்பம் கலந்து வாழ்ந்திருப்பார்கள். புகுந்த வீட்டில் அவர்கள் சொல்வது தான் சட்டம் என்பது போல் சிறப்பாக வாழ்வார்கள்.

கடகம்:

கடக ராசி பெண்களுக்கு பிறந்த வீட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் புகுந்த வீட்டில் எல்லா பொறுப்புகளும் இவர்கள் தலைக்கு மேல் வந்து நிற்கும்.

சிம்மம்:

சிம்ம ராசி பெண்களுக்கு பிறந்து வீட்டில் எதை தொட்டாலும் கோபம் கொண்டிருப்பார்கள். புகுந்த வீட்டில் அந்த கோபம் இன்னும் அதிகமாகிவிடும்.

கன்னி:

கன்னி ராசி பெண்கள் பிறந்த வீட்டில் பொறுப்பான பிள்ளையாக இருப்பார்கள். புகுந்த வீட்டில் அவர்களுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு அதிகமாகி சுமை அதிகரித்து விடும்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மாமியார் வீட்டில் ராணி போல் வாழ்வார்களாம் | Women In This Zodiac Will Be Happy After Marriage

இந்த 7 விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால் அதிர்ஷ்டம் வரப்போவதின் அர்த்தமாம்

இந்த 7 விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால் அதிர்ஷ்டம் வரப்போவதின் அர்த்தமாம்

துலாம்:

துலாம் ராசி பெண்களுக்கு பிறந்த பெண்கள் வீட்டில் எந்த கணக்கு வழக்கு தெரியாமல் செலவழித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் புகுந்த வீட்டில் என்ன செலவு செய்தாலும் அதற்கு கணக்கு பார்க்க வேண்டிய நிலை இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி பெண்களுக்கு பிறந்த வீட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள். புகுந்த வீட்டில் நிம்மதி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாத ஒரு நிலையே இருக்கும்.

தனுசு:

தனுசு ராசி பெண்களுக்கு பிறந்த வீட்டில் நிபந்தனை இருந்திருக்கும். ஆனால் புகுந்த வீட்டில் இவர்கள் சொல்லுக்கு மறு சொல் இல்லை என்பது போல் வாழ்வார்கள்.

மகரம்:

மகர ராசி பெண்களுக்கு பிறந்த வீட்டில் பொறுப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து இருப்பார்கள். ஆனால் புகுந்த வீட்டில் மிகப் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

கும்பம்:

கும்ப ராசி பெண்களுக்கு பிறந்த வீட்டில் எதுவும் தெரியாத செல்ல பிள்ளையாக இருந்திருப்பார்கள். ஆனால் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு எல்லாம் தெரிந்த பக்குவப்பட்ட பெண்ணாக மாறி விடுவார்கள்.

மீனம்:

மீன ராசி பெண்களுக்கு பிறந்த வீட்டில் இவர்களை புரிந்து நடந்து கொண்டிருக்க மாட்டார்கள். புகுந்த வீட்டில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொண்டிருப்பார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US