பெண்கள் தாலிக்கொடியில் மறந்தும் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்க்காதீர்கள்
இந்து மதத்தில்திருமணத்தின் பொழுது கட்டும் தாலி மிகவும் முக்கியமானதாக பார்க்க படுகிறது. அப்படியாக பெண்கள் திருமணத்தின் பொழுது அணியும் தாலியை எப்பொழுதும் கழட்டுவது இல்லை. மேலும் பெண்கள் இந்த தாலியை அவர் அவர் வசதிக்கேற்ப தங்க செயின் அல்லது மஞ்சள் கயிற்றில் அணிந்து கொள்வார்கள்.
பெண்கள் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் அவர்கள் தாலியில் மஞ்சள் குங்குமம் மற்றும் பூ வைத்துக் கொள்வது அவசியமாகும். அதேபோல் தாலி கயிற்றில் தாலி அணிந்து இருப்பவர்கள் தினமும் குளிக்கும் பொழுது அந்த தாலி கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியமாகும். அப்பொழுதுதான் தாலி எப்பொழுதும் மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும்.
அதோடு கோயிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும்பொழுது கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமத்தை தாலியில் நாம் வைத்துக் கொள்வது மாங்கல்ய பலத்தை கொடுக்கும் என்கிறார்கள். அந்த வகையில் பெண்கள் சிலர் அவர்களுடைய வசதிக்கேற்ப தாலி கயிற்றுடன் சேர்த்து ஊக்குகளை (சேஃப்டி பின்) மாட்டி வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்யலாமா? கூடாதா? என்று பார்ப்போம்.
பெண்கள் வீடுகளில் ஊக்குகளை எப்பொழுதும் தேடிக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக அவர்களுடைய வசதிக்கு தாலி கயிற்றில் கோர்த்து வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு தாலி கயிற்றில் ஊக்குகளை கோர்த்து விடுவது குடும்பத்தில் பொருளாதார கஷ்டத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
பொதுவாகவே இரும்பையும் தங்கத்தையும் ஒன்றாக அணிந்திருப்பது நன்மை அல்ல. ஆதலால் இரும்பினால் ஆன எந்த ஒரு பொருளையும் தாலியுடன் சேர்த்து அணியவோ திருமாங்கல்யத்துடன் கோர்க்கவோ கூடாது. இரும்பு சனி பகவானின் பார்வையை பெற்ற ஒரு உலோகமாகும். இது எதிர்மறை ஆற்றலை தரும் என்பதால் தாலிக்கொடியில் ஊக்குகளை கோர்க்காமல் இருப்பது நன்மை அளிக்கும்.
மேலும், தாலி கயிற்றில் தாலி அணிந்தவர்கள் அதை எப்பொழுதும் மாற்றக்கூடாது. வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் மாற்ற வேண்டும். அதிலும் மாற்றும் பொழுது நல்ல நேரம், கிழமை இவை எல்லாம் பார்த்து மாற்றுவது அவசியமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







