பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய ஆன்மீக குறிப்புகள்

By Sakthi Raj Nov 24, 2024 01:30 PM GMT
Report

குடும்பம் சந்தோஷமாக வாழ பணம் ஒரு பங்கு வகிக்கிறது.அப்படியாக பணம் கையில் தங்க,தேவை இல்லாத செலவுகள் ஏற்படாமல் இருக்க நாம் வீட்டை சுத்தமாக வைப்பது அவசியம்.அதிலும் முக்கியமாக பெண்கள் வீடுகளில் மஹாலக்ஷ்மியின் அருளை பெற சில விஷயங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

அப்படியாக நம் வீட்டில் பணம் செழிப்போடு இருக்க கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய ஆன்மீக குறிப்புகள் | Womens Devotional Tips

எல்லோர் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும்.கண்ணாடி இல்லை என்றால் நம்மை நாமே கண்டு கொள்ள முடியாது.அப்படியாக அந்த கண்ணாடி மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம்.சிலர் பெண் குழைந்தைகள் இருக்கும் வீடுகளில் இல்லை குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கண்ணாடியில் பொட்டு ஒட்டி வைப்பது இல்லை ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டி வைப்பது போன்ற செயல்கள் செய்வார்கள்.

அப்படியாக கண்ணாடியில் மஹாலட்சுமி தாயார் வாசம் செய்வதால் அதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.தூசி அழுக்குகள் படியவிடாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய வீட்டில் செல்வதை அதிகரிக்க செய்யும்.

தினம் ஒரு திருமணம் செய்யும் நித்திய கல்யாணப் பெருமாள்

தினம் ஒரு திருமணம் செய்யும் நித்திய கல்யாணப் பெருமாள்

ஆக வீடுகளில் எங்கு கண்ணாடி இருந்தாலும் அதை சுத்தமாக வைக்கவேண்டும்.மேலும் கண்ணாடியை பயன் படுத்தாமல் ஓர் இடத்தில் போட்டு வைப்பதும் கூடாது.அவ்வாறு செய்யும் பொழுது எதிர்மறை ஆற்றல் உருவாகும்.

மேலும் உடைந்த கண்ணாடி ஒரு பொழுதும் வீடுகளில் வைக்க கூடாது.உடனே அப்புறப்படுத்துவது நன்மை உண்டாக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US