வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய சித்தர் ஜீவசமாதிகள்
நாம் சித்தர்களை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.நம்முடைய வாழ்க்கையில் நடத்த முடியாத காரியத்தை சித்தர்கள் வழிபட கட்டாயம் அது நிறைவேற அவர்கள் அருள் புரிவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அப்படியாக இப்பொழுது நினைத்த காரியம் நிறைவேற சித்தர்கள் வழிபாடு பற்றி பார்ப்போம். சித்தர்களை அவர்களுடைய ஜீவசமாதிக்கு சென்று வழிபட வேண்டும்.
அவ்வாறு செல்லும் பொழுது ஒரு ரோஜா பூ மாலை, கற்கண்டு,கருப்பு திராட்சை,100 கிராம் பேரீட்சை பழங்கள் வெற்றிலை பாக்கு சந்தனபத்திக்கட்டு ஆறுநாட்டு வாழைப்பழங்கள் இவை வாங்கி செல்ல வேண்டும்.
இதை சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு எடுத்து சென்று சித்தருடைய சமாதி அல்லது அவருடைய படத்திற்கு இந்த ரோஜா பூ மாலை அனுவித்து ஒரு நெய் தீபம் மற்றும் கற்பூரம் ஏற்றி வாங்கி சென்ற பொருளை பூஜையில் வைத்து வழிபட ஆரம்பிக்க வேண்டும்.
சிலருடைய நியாயங்களுக்கு பதில் கிடைப்பதில் சிரமம் உண்டாகிக்கொண்டு இருக்கும்.அவர்களுடைய பகைமை தீர தீர திங்கட்கிழமை மாலை5 மணிமுதல் 7 மணிக்குள் இவ்வாறு எட்டு திங்கட்கழமை சித்தர்கள் சமாதிக்கு சென்று வழிபாடு செய்யவேண்டும்.
சிலர் ஆன்மீகத்தில் ஈடுபாட்டோடு இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு நல்ல குரு தேடுவதில் சிக்கல்கள் இருக்கலாம்.அவர்கள் தங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக காத்திருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் மாலை 5 மணிமுதல் 8 மணிக்குள் 8 வியாழக்கிழமைகள் செய்யவேண்டும்.
நீண்ட நாள் கடன் தொல்லையால் அவதி படுபவர்கள் தங்களுடைய பிரச்சனை தீர மேற்சொன்ன பூஜையை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து எட்டுமணிக்குள் 8 வெள்ளிக்கிழமைகள் செய்யவேண்டும்.
குடும்பத்தில் பிரச்சனை,சொத்து விவகாரம் உள்ளவர்கள் சனிக்கிழமை மாலை5 மணிமுதல் 8 மணிக்குள் எட்டுசனிக்கிழமைகள் செய்யவேண்டும் சிலர் நீண்டகாலமாக வழக்குகளுடன் போராடிகொண்டிருப்பவர்கள் இந்த ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் செய்யவேண்டும்.
இவ்வாறு செய்ய நிச்சயம் நம்முடைய கர்மபலன்களுக்கு ஏற்ப சித்தர்கள் நமக்கு அருள் புரிவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |