2026 பரம ஏகாதசி: இன்று பெருமாளின் முழு அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஒவ்வொரு மனிதர்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியமும், மன அமைதியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு செல்வ வளம் மிகவும் அவசியமாக இருக்கிறது.
அப்படியாக, ஒருவருக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் வழங்கக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். பெருமாளுடைய திரு மார்பில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரையும் நாராயணரையும் ஒருவர் மனதார வழிபாடு செய்ய துவங்கி அவர்களுடைய வேலையை செய்யும் பொழுது எந்த தடையும் இல்லாமல் பொருளாதார சிறப்பாக அமையும்.
மேலும், இறை வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளையும் தோஷங்களையும் நீக்க கூடியதாக உள்ளது. எவ்வளவுதான் உழைத்தாலும் சிலருக்கு கைகளில் பணம் தங்குவதில்லை, வந்த பணம் அவர்களுக்கு கையில் நிலைப்பதில்லை அல்லது வரவேண்டிய பணம் நீண்ட நாட்களுக்கு கைகளுக்கு வருவதில்லை.

அவ்வாறு துன்பப்படுபவர்கள் சனிக்கிழமை தோறும் பெருமாளைக்கு துளசி மாலை சாற்றி மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர் சாற்றியும் நெய்வேத்தியமாக இனிப்புகள் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அப்படியாக, இன்று பரம ஏகாதசி முன்னிட்டு பெருமாளுடைய முழு அருளையும் பெறவும் அவருடைய அருளால் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் நாம் சொல்ல வேண்டிய பாசுரத்தை பற்றி பார்ப்போம்.
பணப் பிரச்சனை தீர்க்கும் பெருமாள் பாசுரம் :
"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்படு
துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்"

இந்த பாசுரத்தை நீங்கள் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்து அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு முன்பாகவும் அல்லது கோயிலுக்கு சென்றும் இதை நீங்கள் பாராயணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து செல்வீர்கள்.
இவ்வாறு இறைவனுடைய அருளால் ஒவ்வொரு படியாக நம்மை அவர் உயர்த்தி உயர்ந்த நிலைக்கு எடுத்த சென்று விடுவார். பெருமாளின் அற்புதத்தையும் கருணையையும், அருளையும் போற்றி பாடும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாசுரத்தை ஒருவர் பாராயணம் செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற மகிழ்ச்சியும் புண்ணியமும் பெறுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |