ஆடி அமாவாசை: மறந்தும் இந்த விடயங்களை செய்துவிடாதீர்கள்
இந்து பண்டிகையில் அமாவாசை நாள் முக்கிய நாளாக கருதப்படுகிறது.
அதுவுமில்லாமல், தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த மாதம் ஆடி என்பதால் ஆடி அமாவாசை வருகின்ற ஆகஸ்ட் 3, 2024 அன்று மாலை 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 மாலை 04:42 மணிக்கு முடிவடைகிறது.
அந்தவகையில், ஆடி அமாவாசை அன்று செய்யக்கூடாத விடயங்களை குறித்து பார்க்கலாம்.
அமாவாசை அன்று செய்யக்கூடாதவை
1. ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது.
2. ஆடி அமாவாசை அன்று காலையில் வீடு, சமையல் அறை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய கூடாது.
3. காலையில் நீண்ட நேரம் தூங்க கூடாது. காலை 5 மணிக்கு எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் குளித்து விட வேண்டும்.
4. நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது.
5. முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
6. வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.
7. முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.
8. பித்ருக்கள் போட்டோக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து படையல் போட கூடாது.
9. காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.
10. ஆடி அமாவாசை அன்று நகம் வெட்டக் கூடாது. பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.
11. அதேபோல், நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
12. பெண்கள் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது.
13. குறிப்பாக பெண்கள் சமைக்கும்பொழுது புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைப்பதும், விளக்கேற்றுவதும் நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |