வாழ்க்கையில் பயமே அறியாத 4 ராசிகள் யார் தெரியுமா?
வாழ்க்கை என்றால் அதில் குழப்பங்களும் தடைகளும் வருவது இயல்பு என்றாலும் அதை தைரியமாக சமாளிக்கும் திறன் கட்டாயம் நமக்கு தேவை. ஆனால், அவை பலருக்கும் இருப்பது இல்லை. தனக்கு பிடித்ததை செய்யவும், தனக்கு சரி என்று தோன்றுவதை செய்யவும் பலருக்கும் முடிவது இல்லை.
காரணம், அவர்கள் எப்பொழுது ஒரு குழப்பத்தோடும், தான் செய்யும் காரியம் சரியான முறையில் முடியவில்லை என்றால் என்ன செய்வது என்று பயத்தினாலும் தான். அப்படியாக, ஜோதிடத்தில் எது நடந்தாலும் பரவாயில்லை நாம் முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று துணிச்சலாக முடிவு எடுக்கும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு பயம் என்பதே கிடையாது. இவர்கள் வாழ்க்கையில் தனக்கு பிடித்ததை செய்வதற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக இவர்களின் பிடித்தவர்களுக்கு எதையும் யோசிக்காமல் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கையில் நம் மனதிற்கு பிடித்த விஷயங்களை தோல்வியில் முடிந்தாலும் பரவாயில்லை செய்தாக வேண்டும் என்று முடிவு எடுப்பவர்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் அவர்களின் மனதிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதாவது இவர்கள் தான் என்ற எண்ணமும் தனக்கான சந்தோசம் என்பதை அதிக அளவில் விரும்பக்கூடியவர்கள். அதனால் மனதிற்கு பிடித்த விஷயங்களை எதை பற்றி யோசிக்காமல் செய்வார்கள். மேலும் இவர்கள் வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் மட்டுமே என்று நம்பக்கூடியவர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு பிறப்பு முதல் ஆளுமை குணம் அதிகம் இருக்கும். அதனால் இவர்களுக்கு இயல்பாகவே பயம் என்பதே இருக்காது. இவர்கள் பிறருக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அவர்களுக்கு தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆதலால், இவர்களின் மகிழ்ச்சி தான் இவர்களுக்கு முதலில் முக்கியம். பிறர் கொடுக்கும் விமர்சனங்களை இவர்கள் ஒரு போதும் கண்டுகொள்வதில்லை.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு ஒன்றை மனதில் நினைத்து விட்டால் அதை முடிக்கும் வரை அவர்களுக்கு தூக்கமே வருவது இல்லை. மேலும், இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய நீண்ட காலம் யோசித்தாலும் அந்த விஷயத்தை கட்டாயம் செய்து முடித்து விடுவார்கள். இவர்கள் மனதிற்கு சரி என்று தோன்றி விட்டால் யார் பேச்சையும் இவர்கள் கேட்கமாட்டர்கள். கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மேஷ ராசியினர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |