இந்த 3 ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டுமாம்
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஒரு சிலருக்கு சிறிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு பல தடைகளும் தோல்விகளும் தாண்டியே வெற்றிகள் கிடைக்கிறது.
மேலும், ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் பிறந்த ஜாதகமும் அவர்கள் பிறந்த ராசி நட்சத்திரமும் சமயங்களில் காரணமாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் ஒரு சிலர் ராசிகாரர்களுக்கு வாழ்க்கையில் பல தடைகளையும் கஷ்டங்களையும் கடந்தே வெற்றியை அடைவதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மீனம்:
மீன ராசியினர் பொறுத்தவரை அவர்கள் எல்லோருக்கும் அதிக அளவில் ஆலோசனையை கொடுக்கக் கூடியவர்கள். இவர்கள் வாழ்கையில் பல அடிகளும் பல தோல்விகளும் சந்தித்து நிறைய அனுபவங்களை சேகரித்து வைத்திருப்பவர்கள். ஆனால் இவர்களுடைய சொந்த வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டால் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். சமயங்களில் இவர்களுடைய கிரக நிலைகளால் இவர்களுக்கு மனக்குழப்பங்கள் தாழ்வு மனப்பான்மை போன்ற விஷயங்களில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதனால் சமயங்களில் வாழ்க்கை இவர்களுக்கு சற்று கடினமாக தான் இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை பொறுத்த வரை இவர்களும் அவ்வளவு எளிதாக யாரிடமும் பழக மாட்டார்கள் மூன்றாம் நபர்களும் இவர்களிடம் நெருங்கி பழகுவதற்கு யோசனை செய்வார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை நல்ல முறையில் அணுகினாலும் எதிர் தரப்பினர் அதை மிக மோசமாகவே கருதுகிறார்கள். அதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உருவாகிறது. ஏன் காதல் வாழ்க்கையிலும் சரி இல்லற வாழ்க்கையிலும் சரி இவர்கள் பல சோதனைகளை இதனால் சந்திக்கிறார்கள். காரணம் இவர்களை புரிந்து கொள்வதே முதலில் கடினமான விஷயம் தான்.
மிதுனம்:
மிதுன ராசி பொருத்தவரை இவர்கள் இரட்டை தன்மை கொண்டவர்கள். இவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால் பல முறை யோசிப்பார்கள். அதேபோல் இவர்கள் ஒருவரிடம் பழகுகிறார்கள் என்றால் இவர்களுடைய பல முகங்களை நாம் பார்க்க முடியும். மேலும் இரட்டை தன்மை இருப்பதால் இவர்களால் ஒரு விஷயத்தில் சரியாக நின்று முடிவெடுக்கும் நிலை வருவது இல்லை. மிதுன ராசிக்காரர்கள் பொறுத்தவரை இவர்களுடைய நிலையற்ற மனநிலை இவர்களுக்கு வாழ்க்கையில் பல சங்கடங்களையும் தோல்விகளையும் கொடுத்து விடுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







