பழி வாங்கும் குணம் கொண்ட 3 ராசிகள்- இவர்களிடம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டுமாம்
பொதுவாக, ஒருவரை ஏதேனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவர் காயப்படுத்திவிட்டால் பெரும்பாலான மனிதர்கள் சரி அவர்களுக்கு என்ன கஷ்டமோ நம்மிடம் இவ்வளவு கடிந்து நடந்து கொள்கிறார்கள் என்று மறந்து விடுவார்கள்.
ஆனால், ஒரு சிலரால் அந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவும், மறக்கவும் முடியாது. அவர்கள் மனதில் தேக்கி வைத்துக்கொண்டு சமயம் பார்த்து அந்த நபரை பழி வாங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு இருப்பார்கள்.
எத்தனை வருடம் ஆனாலும் அவர்களால் அதை மறக்கவே முடியாது. இதற்கு அவர்களின் பிறப்பு ராசியும் ஒரு காரணம் ஆகும். அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்கள் காயத்தை மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்கும் எண்ணம் படைத்தவர்கள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
இந்த ராசியினர் பொதுவாகவே யாரிடமும் அவ்வளவு நட்போடு பழக்கமாட்டார்கள். தாய் தந்தை துணை என்று யாராக இருந்தாலும் இவர்களை ஏதேனும் சொல்லிவிட்டால் கூட அதை மனதிலே வைத்துக்கொண்டு அதை சொல்லிக்காண்பித்து அவர்களை காயப்படுத்தும் குணம் கொண்டவர்கள். இவர்களால் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை மனதில் வைத்துக்கொண்ட இருப்பார்கள்.
ரிஷபம்:
இந்த ராசியினர் எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடிய ராசியினர். தனக்கு பிடித்த நபருக்கு இவர்கள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். ஆனால், இவர்களுக்கு எதனும் துரோகம் செய்தாலோ, அல்லது காயப்படுத்தி விட்டாலே இவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. மனதில் வைத்துக்கொண்டே இருப்பார்கள். இருப்பினும் இவர்களின் கோபத்தை உடனே வெளிகாட்டமாட்டார்கள் ஆனால் சமயம் பார்த்து அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள்.
கடகம்:
இந்த ராசியினர் எல்லோரிடமும் நன்றாக பழகும் குணம் உள்ளவர்கள். ஆனால் இவர்கள் மனதில் பிறரை மன்னிக்கும் குணம் சுத்தமாக இருக்காது. நெருங்கிய நபர் ஒரு வார்த்தை தெரியாமல் சொல்லிவிட்டாலும், அதை இவர்களால் ஏற்க முடியாது. அந்த நபரை இவர்கள் எதிரியாக பார்க்க தொடங்கி விடுவார்கள். இவர்கள் எல்லோரையும் அதிகம் நம்புவதும் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |