இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன பயம் சற்று அதிகமாகவே இருக்குமாம்

Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் அவர்களுடைய சந்திரன் பொறுத்து குணம் மாறுபடுகிறது. அந்த வகையில், ஒரு சில ராசிக்கு இயல்பாகவே மனதில் பயம் சற்று அதிகமாக இருக்கும். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

காதல் முதல் திருமணம் வரை மீன ராசிக்காரர்கள் இந்த பரிகாரம் செய்தால் அமோகமாக வாழலாம்

காதல் முதல் திருமணம் வரை மீன ராசிக்காரர்கள் இந்த பரிகாரம் செய்தால் அமோகமாக வாழலாம்

கடகம்:

கடக ராசியை பொறுத்தவரையில் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். ஆதலால், இவர்கள் எப்பொழுதும் உறவுகளில் ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்கின்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது.

தனுசு:

இவர்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்யக்கூடியவர்கள். அதனால், இவர்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் சிறிய பிரச்சனை வந்தால் போதும் பெரிய அளவில் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். ஒரு சிறிதாக காய்ச்சல் வந்தால் கூட எதிர்காலத்தைப் பற்றிய பயமும் குழந்தைகளை பற்றிய அச்சமும் வந்துவிடுகிறது.

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன பயம் சற்று அதிகமாகவே இருக்குமாம் | Zodiac Signs That Fear Most In Life

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வாழ்க்கையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறதாம்

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வாழ்க்கையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறதாம்

மீனம்:

மீன ராசி பொருத்தவரை இவர்கள் பொறுப்புகளை தூக்கி சுமக்கக் கூடியவர்கள். அந்த வகையில், இவர்கள் தான் இல்லாமல் போய்விட்டால் தன் குடும்பம் என்ன நிலைக்கு மாறும், அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை பற்றி இவர்கள் அதிக அளவில் பயப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள்.

மிதுனம்:

இவர்கள் எப்பொழுதும் தங்களுடைய உறவுகள் தனக்காக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள், அது மட்டுமல்லாமல் எல்லாம் தன்னை சார்ந்து நடக்க வேண்டும் என்றும் எண்ணக் கூடியவர். ஆகையால், எப்பொழுதும் இவர்களுக்கு சந்தேகம் அடிக்கடி வருவதை நாம் பார்க்க முடிகிறது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US