நாளைய ராசிபலன் (19-10-2026)
மேஷம்:
வியாபார விஷயங்களில் நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
ரிஷபம்:
நீண்ட நாள் பிரச்சனை நல்ல முடிவு பெரும். சிந்தனைகளில் இருந்து குழப்பங்கள் விலகும். வேலையில் மதிப்பு உயரும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
மிதுனம்:
குழந்தைகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுடைய செயல்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நெருக்கடிகள் வரலாம்.
கடகம்:
புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணி மாற்றம் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக நினைத்த இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி:
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாகன பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
துலாம்:
விலகி சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். அரசு வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய எண்ணங்கள் தடை இன்றி நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
விருச்சிகம்:
உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கும். நெருங்கியவர்களால் அலைச்சல் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள்.
தனுசு:
பேச்சில் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் இருக்கும். வியாபாரங்களில் உயர்வை சந்திப்பீர்கள். திடீர் பயணங்கள் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
மகரம்:
மற்றவர்களுடைய வீண் கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமான செயல்கள் உங்களுக்கு நன்மையை கொடுக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை உயரும்.
கும்பம்:
தாயின் உடைய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் விலகும். எதிர்பாராத சில பயணங்கள் உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
மீனம்:
பணவரவுகள் வழியாக சேமிப்புகள் உயரும். திட்டமிட்ட வேலையை முடிப்பீர்கள். நவீன மின்னணு சாதனைகள் மீதான ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் வெளியூர் பயண வாய்ப்பு சாதகமாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |