வாழ்க்கையில் எல்லா துன்பங்களிலும் காப்பாற்றக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா?
இந்த மனிதர்கள் உடைய வாழ்க்கைய என்பது நிரந்தரமற்றது என்பதை நாம் நன்றாக அறிந்திருப்போம். ஆனால், அந்த நிரந்தரமற்ற நாள் எப்பொழுது வரும் என்பது தான் யாருக்கும் அறிந்திடாத விஷயம். அதனாலே, இங்கு பலரும் நான் என்ற ஆணவம் கொண்டு பல ஆட்டங்களை ஆடுவதுண்டு.
பிறகு அந்த ஆணவத்தால் அழிந்து போவதையும் பார்க்கமுடிகிறது. ஆனால், ஒருவர் நிலையான வாழ்க்கையை வாழ இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நாளும் நம்மை அறிந்து செயல்பட வேண்டும்.

அதற்கு நிச்சயமாக நமக்கு "நிதானம்" என்பது அவசியம். மேலும், இந்த நிதானத்தில் இருந்து தான் நம்முடைய வாழ்க்கை துவங்குகிறது. ஒருவரை துன்பப்படுத்துவதற்கு முன்பு நிதானமாகவும்,
ஒருவரை காயப்படுத்துவதற்கு முன்பு நிதானமாகவும், ஒரு செயலை செய்வதற்கு முன்பு நிதானமாகவும், ஒருவரிடம் வாக்குறுதி கொடுப்பதற்கு முன்பு நிதானமாகவும்,
குடும்பத்தில் சண்டை வருகின்ற பொழுது நிதானமாகவும் இப்படி ஒவ்வொரு இடங்களிலும் நாம் "நிதானம்" என்கின்ற ஒரு விஷயத்தை கடைப்பிடித்து விட்டால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் செய்த புண்ணியத்தை விடவும் அந்த நிதானம் நம்மை காப்பாற்றும்.
காரணம் நிதானம் என்கின்ற ஒரு நொடி "அமைதி" நம்மை பல தீமைகளை செய்வதிலிருந்தும் துன்பத்திற்கு ஆளாக்குவதில் இருந்தும் நம்மை காப்பாற்றுகிறது.

பெயர், புகழ், பணம் எதுவாக இருந்தாலும் எல்லா மண்ணோடு மண்ணாக போகக்கூடியது என்பதை வாழும் ஒவ்வொரு நாளும் எல்லோரும் அறிந்திருந்தாலும் இந்த நிதானம் மட்டுமே எல்லா பிறவியிலும் நம்மை காப்பாற்றும்.
இந்த உலகம் இந்த உயிரானது இந்த பிறவியிலே முடிந்து விடும் என்பதை யாரும் உறுதியாக சொல்லமுடியாது. அதற்கு சாட்சியும் இல்லை. பல பிறவிகள் இருக்கலாம். எந்த பிறவியாக இருந்தாலும் அதில் நிதானம் கொண்டு வாழ்ந்து விட்டால் இறைவனின் காலடியில் சரண் அடையலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |