2026 இல் தங்கம் வாங்கி குவிக்கப்போகும் ராசிகள் யாரெல்லாம் தெரியுமா?

By Pavi Jan 13, 2026 08:19 AM GMT
Report

2026ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள் தங்கத்தை வாங்கி குவிக்கப்பார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.

2026 இல் தங்கம் வாங்கும் ராசிகள்

2026ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நிகழும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த 2026ம் ஆண்டு பல கிரக பெயர்ச்சிகள் இடம்பெறும். இது பல ராசிகளுக்கும் வாழ்க்கையில் பல திருப்பங்களை கொண்டு வரும். இதனால் ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு பலன் பெறுவார்கள். 

2026 இல் தங்கம் வாங்கி குவிக்கப்போகும் ராசிகள் யாரெல்லாம் தெரியுமா? | Zodiac Signs That Will Buy Gold In 2026

சமீப காலமாக தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் தங்கத்தை நுகர்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. பொதுவாக சாதாரண மக்களுக்கு இது ஒரு சவாலாக இருந்தது. 

இந்த நிலையில் ஜோதிடத்தில் இந்த 2026 ம் ஆண்டு பல கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு தங்கம் வாங்கும் யோகம் உருவாகும் எனப்படுகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம். 

2026 இல் தங்கம் வாங்கி குவிக்கப்போகும் ராசிகள் யாரெல்லாம் தெரியுமா? | Zodiac Signs That Will Buy Gold In 2026

 மேஷம்

  1. 2026ல் மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக வளர்ச்சி அடைவார்கள்.
  2. வேலை இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
  3. உங்களுக்கு நடக்க வேண்டி நல்லது எல்லாம் வருடத்தின் பாதியில் நடக்குமாம். 
  4. கூடுதல் வருமானம் இருக்கும். அதனால் மேஷ ராசிக்காரர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பார்கள்.
  5. இதன் காரணமாக ஆண்டு இறுதிக்குள் தங்கத்தை வாங்க நேரிடும். 

ரிஷபம்

  1. 2026ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக .து இருக்கும். 
  2. பழைய முதலீடுகள் லாபம் தரும்.
  3. வணிக வாய்ப்புகள் அதிகரிப்பதால் சம்பள அதிகரிப்பு கிடைக்கும். 
  4. இதனால் பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.
  5. இதனால் பணத்தை இருமடங்காக்க நினைப்பார்கள். 
  6. இதன் காரணமாக தங்கத்தை முதலீடு செய்வீர்கள். 

சிம்மம்

  1. சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026ஆம் ஆண்டு பொருளாதார உயர்வை தரும்.
  2. சாதகமான கிரக மாற்றங்கள் நிகழ இருப்பதால் தொழில், வளர்ச்சி, வணிக லாபம் மற்றும் சொத்து தொடர்பாக பிரச்சனைகள் தீரும்.
  3. தங்கம் மூலம் செல்வத்தை சேமிக்க முயல்வீர்கள்.
  4. அதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  5. மொத்தத்தில் இந்த ஆண்டில் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் உயர்வை சந்திப்பார்கள். 

துலாம்

  1. துலாம் ராசி சுக்கிரனால் ஆளப்படுகிறது. அவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு மகத்தான ஆண்டாக இருக்கப்போகிறது.
  2. இந்த ஆண்டில் வீடு, தங்கம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்ய நினைப்பீர்கள்.
  3. நிதி நிலைமை நன்றாக இருக்கும். வணிகத்தில் லாபம் இருக்கும்.
  4. துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் அடையும் முன்னேற்றம் அவர்களை தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டும்

கும்ப

  1. ராசிக்காரர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமையும்.
  2. புதிய வருமானத்திற்கு வழிகள் பிறக்கும்.
  3. முதலீடுகள் லாபம் தரும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும்.
  4. இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். தங்கம் மூலம் செல்வத்தை சேர்க்க நினைப்பீர்கள்.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US