தங்களின் உழைப்பால் கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள் யார்?
ஜோதிட ரீதியாக குறிப்பிட்ட சில ராசியினர் எவ்வளவு தடைகள் தாமதங்கள் வந்தாலும் விடாமுயற்சியுடன் போராடி அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்து விடுவார்கள். ஒரு சிலர் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரராக மாறக்கூடிய யோகம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், உழைப்பால் கோடீஸ்வர நிலையை அடையக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசியை பொறுத்தவரை இவர்களுக்கு விடாமுயற்சி இருக்கும். ஒரு விஷயத்தை மனதில் நினைத்து விட்டார்கள் என்றால் அதை அடையும் வரை இவர்கள் ஓய்வதில்லை. இவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அந்த காரணத்திற்காகவே இவர்கள் தோல்வியுற்றாலும் மீண்டும் முயற்சி செய்து மிகப் பெரிய வெற்றியை அடைந்து விடுகிறார்கள். தங்களுடைய விடாமுயற்சியால் பல சிம்ம ராசியினர் கோடீஸ்வர யோகத்தைப் பெற்று வாழக்கூடியதை பார்க்கலாம்.
விருச்சிகம்:
செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்ற விருச்சிக ராசியினர் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வீரம் விவேகத்துடன் செயல்படுபவர்கள். இவர்களிடம் யாரேனும் உன்னால் இது செய்ய முடியாது என்று சொன்னால் அதை அவர்கள் முறியடித்துக் காட்ட வேண்டும் என்கின்ற ஒரு சவால் எடுத்துக் கொள்கிறார்கள்.
அதனால் இவர்கள் தொழில் என்று வரும் பொழுது தம்மால் முடியாத காரியம் எதுவுமில்லை என நினைத்து சபதம் போல் இவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
மகரம்:
சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினர் வாழ்க்கையில் எப்பொழுதும் தான் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள்.
இவர்கள் தங்களுடைய உழைப்பால் சம்பாதித்து தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை கொள்பவர்கள். அதேபோல் இவர்கள் இடைவிடாமல் ஓய்வின்றி உழைக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். மகர ராசியினர் பொறுமையுடன் செயல்பட்டு பெரிய அளவிற்கு வந்துவிடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |