இன்றைய ராசி பலன்(08-07-2025)

Report

மேஷம்:

இன்று பெண் தோழிகளிடம் பழகும் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம்.

ரிஷபம்:

அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக பலரும் செயல்படுவார்கள். வங்கியில் வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். திருமண பேச்சில் சில சிக்கல் உண்டாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்:

இன்று செய்த தவறை எண்ணி மனம் வருந்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும்.

கடகம்:

உறவினருடன் ஏற்பட்ட பிரச்சனை தீரும். பூர்வீக சொத்து விவகாரத்தை பேசி முடிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும். 

சிம்மம்:

இன்று முடிந்த வரை உங்கள் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மதியம் மேல் நற்செய்தி உங்களை தேடி வரும்.

கன்னி:

இன்று வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்காமல் போகலாம். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

இறைவழிபாட்டில் மனதை செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொலைத்தூர பயணம் சாதகமாக அமையும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பண கஷ்டங்கள் விலக செய்ய வேண்டிய 6 முக்கியமான பரிகாரங்கள்

பண கஷ்டங்கள் விலக செய்ய வேண்டிய 6 முக்கியமான பரிகாரங்கள்

விருச்சிகம்:

வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்சனைகள் உண்டாகும். வியாபார நெருக்கடி நீங்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள்.

தனுசு:

மனதில் உள்ள நீண்ட நாள் கவலைகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். சகோதரி வழியில் சில பிரச்சனைகள் சந்திப்பீர்கள். குடும்பத்துடன் பொழுது போக்கு நேரத்தை செலவு செய்வீர்கள்.

மகரம்:

நேற்றைய நெருக்கடி நீங்கும். செயல்கள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களின் ஆதரவால் பிரச்சனைகள் தீரும். தாராளமாக செலவுகள் செய்வீர்.

கும்பம்:

தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும் நாள். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். வருமானத்தில் உண்டான தடைகள் விலகும். நன்மையான நாள்.

மீனம்:

மன கவலைகள் விலகும். சிலருக்கு சொந்தங்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அண்ணன் தம்பி உறவுகளில் விரிசல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US