ராஜ யோகம் பெற பின்பற்ற வேண்டிய முக்கியமான 15 ஆன்மீக குறிப்புகள்
1.குடும்பத்துடன் வருடம் ஒரு முறையாவது கட்டாயம் குலதெய்வம் கோயில் மற்றும் பூஜைகளில் பங்கு கொள்ள வேண்டும்.
2. தினமும் காகம், பசு போன்ற விலங்குகளுக்கு முடிந்த அளவு உணவு அளியுங்கள்.
3. தீராத நோய் ஆரோக்கிய குறைபாடுகள் விலகவும், மரண பயம் நீங்கவும் மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
4. வீடுகளை விட்டு வெளியே செல்லும் பொழுது கலாச்சாரம் அடிப்படையில் டாட்டா காட்டும் பழக்கம் விடுத்து இறைநாமம் சொல்லி கைகூப்பி வணங்கி செல்வதே சிறந்த பலன் அளிக்கும்.
5. முடிந்த வரை வீடுகளில் பெண்கள் கைகளில் தவறாமல் மருதாணி வைத்து வாருங்கள். இவை அதிர்ஷ்டம் பெற்று கொடுக்கும்.

6. வீடுகளில் ஒரு பொழுதும் குழந்தைகளை அடிக்காதீர்கள். இவை பண சுமை, ஆரோக்கிய குறைபாடு உண்டு செய்யும்.
7. அதேபோல் இடது கையால் எண்ணெய் தேய்ப்பதை தவிருங்கள். இவை சந்ததியினருக்கு தீமை உண்டாகலாம்.
8. அதேபோல் இடது கைகளால் உணவு பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது.
9. ஒரு பொழுதும் சூரிய பகவானை எதிர்கொண்டது போல் அதாவது கிழக்கு நோக்கி, அல்லது மேற்கு நோக்கி சிறுநீரை கழிப்பதை தவிர்க்க வேண்டும்.
10. சாப்பிடும் போது தவிர்த்து இடது கைகளால் ஒரு பொழுதும் தண்ணீர் குடிக்க கூடாது.
11. அதே போல் உங்கள் ஜோதிடர் குரு, ஜோதிடர், மருத்துவர், ஆடிட்டர், வக்கீல், ஆசிரியர், சகோதரி, ராஜா அல்லது குழந்தை பார்க்க செல்லும் பொழுது கட்டாயம் பரிசு பொருட்கள் இல்லாமல் செல்ல கூடாது.

12. தவறியும் முடி, சாம்பல், எலும்புகள், மண்டை ஓடு, பருத்தி, தூசி, தேங்காய், உலர்ந்த உமி ஆகியவற்றில் மிதித்து விடாதீர்கள்.
13. ஒரு பொழுதும் மற்றவர்களின் உடைகள், செருப்புகள், மாலை பயன் படுத்தாதீர்கள்.
14. ஒரு பொழுதும் யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்து பிறகு பின் வாங்காதீர்கள். மிக பெரிய பாதிப்பை உண்டு செய்யும்.
15. எந்த சூழ்நிலையிலும் பசுவை உதைப்பது, அடிப்பது அல்லது பட்டினி போடுவது கூடாது. இவை மிக பெரிய மகா பாவத்தை உண்டு செய்யும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |