அடுத்த மூன்று ஆண்டிற்கு இந்த ராசிகளுக்கு சனி கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாதாம்
ஜோதிட ரீதியாக சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவராக இருக்கிறார். அதேபோல், சனி பகவான் தான் கர்மகாரனாக விளங்க கூடியவராக இருக்கிறார். "சனி கொடுக்க எவர் தடுப்பார்" என்ற பழமொழி இருக்கிறது.
சனி பகவான் கஷ்டங்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதையும் தடுக்க முடியாது, இன்பத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதையும் நம்மால் தடுக்க முடியாது.
மேலும், சனிபகவானுடைய அருளால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ராசியினர் தொழில் வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையிலும் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் பொன்னான காலமாக அமையப்போகிறது. வேலைவாய்ப்பு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக இவர்கள் மிகப்பெரிய அளவில் உயரப் போகிறார்கள்.
பதவி உயர்வு மற்றும் எதிர்பார்த்த இடத்திற்கு வேலை மாற்றம் போன்றவை இவர்களுக்கு கைக்கூடி வரப்போகிறது. கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவார்கள்.
மிதுனம்:
ஜோதிட ரீதியாக மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்து வருகின்ற சில ஆண்டுகள் மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டுகளாக கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள், பணிகள் எல்லாம் இவர்களுக்கு சாதகமாக முடிய போகிறது.
சட்ட விவகாரங்களில் இருந்து விடுதலை பெற்று ஒரு நல்ல முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியும் பெறுவீர்கள். உயர்கல்வி வெளிநாடு சென்று வாழக்கூடிய அமைப்பை உருவாக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |