2026: ஆடி 3ஆம் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்யும் முறை மற்றும் பலன்கள்
ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தினம் ஜூலை 31-ஆம் தேதி ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை அன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று காளிகாம்பாளை மனதார நினைத்து கோவில்களுக்கு சென்றும் வீடுகளில் இருந்தும் வழிபாடு செய்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடையக்கூடிய பாக்கியத்தை அம்மன் அருள்கிறார்.

அதாவது நீங்கள் உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும், வாழ்க்கையில் துன்பம் அவமானம் என்று நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது இன்றைய தினம் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை காளிகாம்பாளையம் மனம் உருகி வழிபாடு செய்கின்ற பொழுது சகல செல்வமும் நமக்கு கிடைக்கிறது.
ஒரு சிலருக்கு எதிரிகளால் தொல்லை, வழக்கு விஷயங்களில் பிரச்சனை ,குடும்பத்தில் பிரிவு, உடல் நல ஆரோக்கியத்தை பிரச்சினைகள், திருமண தோஷம் புத்திர தோஷம் வேலையில் சங்கடம் என்று பல துன்பங்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் எல்லாம் என்று மனம் உருகி அன்னை காளிகாம்பாளை வழிபாடு செய்கின்ற பொழுது அன்னையின் பரிபூரண அருளாலும் அன்னையின் அருட்பார்வையாலும் நீங்கள் மிக உயர்ந்த நிலைக்கு செல்வதோடு அன்னை உங்களை உலகம் போற்றும் ஒரு பக்தராகவும் உலகம் போற்றும் ஒரு மனிதராகவும் மாற்றக்கூடிய அருளை வழங்குகிறார்.
இன்றைய தினம் பெண்கள் வீடுகளில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வது என்பது அவர்களுக்கு முகத்தில் நல்ல பொலிவையும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் லட்சுமி கடாட்சத்தையும் உண்டு செய்யும்.
இவ்வளவு அற்புதமான ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை தவறவிடாமல் அன்னை காளிகாம்பாளை சரணடைந்து நற் பலன்களை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |