2025 ஆம் ஆண்டு எதிர்பாராத ராஜ வாழ்க்கையை வாழ போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் குறிக்கும் கிரகங்களாக சுக்கிர பகவான் திகழ்கிறார்.அப்படியாக சுக்கிரன் சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்று வாழ முடியும்.
அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஒருவரது நிதி நிலையிலும் அதன் தாக்கம் தெரியும். ஜோதிடத்தில் சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
அதுவும் சுக்கிரன் டிசம்பர் 28 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். மேலும்,இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டம் உருவாகிறது.அதனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமையும் வாய்ப்பை பெறுவார்கள்.அப்படியாக அதிர்ஷ்டம் பெற போகும் அந்த ராசிகள் யார் என்று பார்ப்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நடக்கவுள்ளது.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முதல் நிதி நிலையில் நல்ல மாற்றமும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சொத்து விவகாரங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.தொழில் ரீதியாக நிறைய வாடிக்கையாளர்களையம் லாபமும் கிடைக்கும்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மதிப்பும் பதவி உயர்வும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பலவிதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.வணிகர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் தொடர்பான விஷயங்கள் வெற்றியில் அமையும்.வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் படி படியாக குறையும்.எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்.
மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் ஆசை இருந்தால் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள்.தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |