2025 ஆம் ஆண்டின் கடைசி செவ்வாய் பெயர்ச்சி- யோகம் யாருக்கு?
2025 ஆம் ஆண்டு கடைசி செவ்வாய் பெயர்ச்சியானது டிசம்பர் 7ஆம் தேதி அன்று நிகழ்ந்து ஜனவரி 16 ஆம் தேதி அன்று வரை தொடர உள்ளது. இந்த செவ்வாயானது தனுசு வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் என்பது கோபம், வீரம், தன்னம்பிக்கை போன்ற ஆற்றல்களை உடையது.
அதாவது இந்த செவ்வாய் பெயர்ச்சியானது ஒரு சில ராசிகளுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் ஆற்றலை கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் சாதனை செய்ய தூண்டக்கூடிய ஒரு அற்புதமான கிரகமாக இருப்பதால் இந்த 2025 ஆம் ஆண்டு நடக்கக்கூடிய இந்த கடைசி செவ்வாய் பெயர்ச்சியானது எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்க காத்திருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது ஒரு புதுவகையான பாதையை கொடுக்கப் போகிறது. அதாவது படிப்பு தொழில் மற்றும் பயணங்கள் என அவர்கள் புதிதாக ஒரு பயணத்தில் செல்ல காத்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு திடீரென்று வெளிநாடு பயணம் செல்வதற்கான யோகம் கிடைக்கும். இவர்களுக்கு ஒரு சிறந்த குரு இந்த காலகட்டங்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த செவ்வாயின் பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையை விழிப்புணர்வு செய்யக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் யார் இவர்கள் வாழ்க்கையில் எந்த பாதையில் பயணிக்க வேண்டும்? குடும்ப வாழ்க்கையில் நாம் சரி செய்து கொள்ள வேண்டிய நிலை என்ன என்பதை பற்றி அனைத்து புரிதலும் இவர்கள் பெற்று ஒரு சிறந்த வாழ்க்கை வாழ காத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்தலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த செவ்வாயின் பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக இவர்களுடைய கூட்டாளிகளுடன் நல்ல இணைவு பெறப்போகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் ஒரு நல்ல திருப்புமுனை அமையும். தொழில் ரீதியாக புது ஒப்பந்தங்கள் இவர்களுக்கு லாபகரமாக அமையப் போகிறது. இருந்தாலும் இவர்கள் ஒரு சில இடங்களில் பொறுமையாக செல்வது அவசியமாக இருக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் பொன்னான காலமாக அமையும்.
மீனம்:
மீன ராசியினருக்கு செவ்வாய் பகவானின் இந்த தனுசு பெயர்ச்சியானது இவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்து ஒரு தைரியமான முடிவை எடுக்கக்கூடிய நிலையை கொடுக்க போகிறது. இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் வியாபாரத்தில் சிறந்த உயர்வுவும்குடும்பங்களிடையே ஒரு நல்ல அன்பு பாலம் அமைக்கக்கூடிய அற்புதமான காலமாக இருக்கிறது. கால சூழ்நிலையால் இவர்கள் சமுதாயத்தில் தொலைத்த பெயரை மீட்டெடுக்கக்கூடிய அற்புதமான காலமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |