தீபாவளி: எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை மிகவும் முக்கியாக கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி பண்டிகையை மிக உற்சாகமாக கொண்டாடுவார்கள். காரணம் தீபாவளி அன்று புது துணி அணிந்து, இனிப்பு வகைகள் செய்து, வெடி வெடித்து குடும்பத்துடன் மிக உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
அப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கொண்டாடப்படும். இந்த 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்டுள்ளது. தீபாவளியின் முக்கிய நிகழ்வே அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து குளிப்பது தான்.
அந்த வகையில் நாளை தீபாவளி பண்டிகை முன்னிட்டு எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம் எது என்று பார்ப்போம். பொதுவாக தீபாவளி பண்டிகை அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடும். அதனால் அன்றைய தினம் காலை 3 மணிக்கு எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வெந்நீரில் குளிப்பது புனித கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
மேலும், தீபாவளி அன்று மட்டுமாவது நாம் குளிக்கும் பொழுது சீகைக்காய் தேய்த்து குளிப்பது அவசியம் ஆகும். நாளைய தினம் உடல் முழுவதும் நல்ல எண்ணெய் தேய்த்து சூடான நீரில் சீகைக்காய் தேய்த்து குளிப்பது நமக்கு பெரும் புண்ணியத்தை தேடி கொடுப்பது மஹாலட்சுமி தாயாரின் அருளை பெற்று கொடுக்கும்.
அதனால் நாளை அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் குளிப்பது நல்ல பலனை கொடுக்கும். அதேபோல் வீடுகளில் பூஜைகள் செய்து வழிபாடு செய்ய உகந்த நேரமாக காலை 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்துடன் வழிபாடு செய்தல் நமக்கு இறைவனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
முடியாதவர்கள் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வழிபாடு செய்யலாம். அதேபோல் நாளை பூஜை அறையிலும் வீடுகளிலும் எவ்வளவு விளக்குகள் ஏற்ற முடியுமோ அவ்வளவு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வது நம் வீட்டில் உள்ள இருள் நீங்க செய்து நமக்கு இறை அருள் பெற்று கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







