2025 சந்திர கிரகணம்: இன்று மறந்தும் இந்த செயலை செய்யாதீர்கள்
2025 ஆம் ஆண்டு மொத்தம் நான்கு கிரகணங்கள் நிகழவுள்ளது. ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ள நிலையில் அடுத்த கிரகணங்கள் வரும் மாதங்களில் நிகழ இருக்கிறது. அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நிகழ உள்ளது.
சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் அப்பொழுது சூரியன் ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது இதனால் சந்திர கிரகணம் உருவாகிறது.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் சூதக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் மக்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில் இன்று சந்திர கிரகணம் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
கிரகண காலங்களில் உணவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையை தரும் என்கிறார்கள். காரணம் சந்திர கிரகணம் நேரத்தில் ஜீரண சக்தி பலவீனமடைந்து போகலாம். அதனால் கிரகணம் முடிந்த உடன் குளித்துவிட்டு சாப்பிடுவது நம்முடைய உடலுக்கு நன்மை உண்டாக்கும்.
அதோடு அன்றைய நாளில் தண்ணீரில் துளசி இலைகள் அல்லது அருகம்புல் இலைகளை போட்டு வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும் கிரகண காலங்களில் நாம் சுப காரிய நிகழ்ச்சிகள் எதுவும் செய்தல் கூடாது.
அதேபோல் கிரகணம் நிகழும் பொழுது நகம் வெட்டுவது, முடி வெட்டுவது போன்ற செயல்களும் செய்தல் கூடாது. கிரகணத்தின் பொழுது சிலருக்கு மனம் பதட்டமாக காணப்படும். ஆதலால் அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்வது நம்மை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







