2025 புது வருடம் முதல் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய அற்புதமான பரிகாரம்
காலம் மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது.அதனால் ஒவ்வொரு நாளையும் நாம் வீண் செய்யாமல் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்.அதோடு நினைத்தது நல்லபடியாக செய்து முடிக்க இறைவன் அருளை பெறவேண்டும்.
அப்படியாக ஜனவரி மாதம் முதல் சனிக்கிழமையில் நாம் இறைவனின் அருளை பெறவும்,இந்த வருடம் சிறப்பாக அமையவும் செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம். ஆன்மீகத்தில் பிரம்ம முகூர்த்த வழிபாடு என்பது மிக சிறந்த ஒன்றாகும்.
அந்த வேளையில் எழுந்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சந்திக்கும் எவ்வளவு பெரிய தடைகளும் நம்மை விட்டு விலகி விடும்.அப்படியாக நாளை புது வருடம் முதல் சனிக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டு கொஞ்சம் சிரமம் பாராமல் தயிர் சாதம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
பொதுவாக சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.அதுவும் மார்கழி மாதத்தில் வரும் சனிக்கிழமை இன்னும் கூடுதல் விஷேசம் கொண்டவையாக இருக்கிறது.
அந்த சிறப்பு வாய்ந்த நாளில் தூய மனதோடு தயிர் சாதம் செய்து பெருமாளுக்கும் அனுமனுக்கும் மிகவும் பிடித்த நெய்வேத்தியத்தை படைத்து வழிபாடு செய்தால் அவர்கள் மனம் குளிர்ந்து நமக்கு அருள்புரிவார்கள்.
மேலும்,எப்பொழுதும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டிற்கு சக்திகள் அதிகம்.அந்த நேரத்தில் நம் மனம் மிக தெளிவாக இருக்கும்.அதோடு ஒரு நோட் எடுத்து,அதில் மஞ்சள் தடவி எடுத்து கொண்டு 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்கள்.
பெருமாளின் அவதாரமான ராமரை நினைத்து எந்த காரியம் தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெரும்.இவ்வாறு நாளை அதிகாலை வேளையில் பிராத்தனை செய்ய மனதில் உற்சாகம் பிறக்கும்.
நீங்கள் நினைத்த காரியம் இறைவன் அருளால் நடந்தேறும்.மனதில் தர்ம சிந்தனை தோன்றும்.அந்த உற்சாகம் அந்த வருடம் முழுவதும் உங்களை நம்பிக்கையோடு செயல்பட வைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |