2025 மார்கழி மாதத்தில் தவறக்கூடாத முக்கியமான விரத நாட்கள்
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் மிக மிக விசேஷமான மாதமாகும். இந்த மாதங்களில் அதிகாலை 4 மணிக்கு பெண்கள் எழுந்து வீடுகளில் வண்ண நிறங்களால் கோலங்கள் போட்டு இறைவழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
அது மட்டுமல்லாமல் மார்கழி மாதத்தில் நிறைய பஜனை வழிபாடுகள் நடைபெறும். மேலும் பகவான் கிருஷ்ணர் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று குறிப்பிடுகிறார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் நிறைய விசேஷங்கள் இருக்கிறது.
அதாவது, ஏகாதசியில் மிகவும் சக்தி வாய்ந்த வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, சிவபெருமானுக்குரிய ஆருத்ரா தரிசனம் போன்ற பல்வேறு சிறப்புகள் இந்த மார்கழி மாதத்தில் தான் வருகிறது. அப்படியாக 2015 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் நாம் தவறவிட கூடாத முக்கிய விரத நாட்கள் மற்றும் விசேஷங்களை பற்றி பார்ப்போம்.

மார்கழி மாதம் 2025 விசேஷங்கள் :
டிசம்பர் 19 மார்கழி 04 வெள்ளி அனுமன் ஜெயந்தி
டிசம்பர் 25 மார்கழி 10 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை
டிசம்பர் 30 மார்கழி 15 செவ்வாய் வைகுண்ட ஏகாதசி
ஜனவரி 01 மார்கழி 17 வியாழன் ஆங்கில புத்தாண்டு
ஜனவரி 03 மார்கழி 19 சனி ஆருத்ரா தரிசனம்
ஜனவரி 14 மார்கழி 30 புதன் போகிப் பண்டிகை
மார்கழி மாதம் 2025 விரத நாட்கள் :
அமாவாசை டிசம்பர் 19 மார்கழி 04 வெள்ளி
பெளர்ணமி ஜனவரி 03 மார்கழி 19 சனி
கிருத்திகை டிசம்பர் 31 மார்கழி 16 புதன்
திருவோணம் டிசம்பர் 23 மார்கழி 08 செவ்வாய்
ஏகாதசி
டிசம்பர் 30 மார்கழி 15 செவ்வாய்
ஜனவரி 14 மார்கழி 30 புதன்
சஷ்டி
டிசம்பர் 25 மார்கழி 10 வியாழன்
ஜனவரி 09 மார்கழி 25 வெள்ளி
சங்கடஹர சதுர்த்தி ஜனவரி 06 மார்கழி 22 செவ்வாய்
சிவராத்திரி டிசம்பர் 18 மார்கழி 03 வியாழன்
பிரதோஷம்
டிசம்பர் 17 மார்கழி 02 புதன்
ஜனவரி 01 மார்கழி 17 வியாழன்
சதுர்த்தி டிசம்பர் 24 மார்கழி 09 புதன்
மார்கழி மாதம் 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
அஷ்டமி
டிசம்பர் 27 மார்கழி 12 சனி
ஜனவரி 10 மார்கழி 26 சனி
நவமி
டிசம்பர் 28 மார்கழி 13 ஞாயிறு
ஜனவரி 11 மார்கழி 27 ஞாயிறு
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |