அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான மாசி அமாவாசை வழிபாடு
பொதுவாக அமாவாசை என்றால் முன்னோர்கள் வழிபாடு தான் நியாபகத்திற்கு வரும்.அப்படியாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் மாசி மாதம் வரும் அமாவாசை மிக முக்கியமாக கருதப்படுகிறது.இந்த மாசி அமாவாசை குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதோடு ஏழு கிரகங்கள் ஒன்றிணைந்து வரக்கூடிய அமாவாசையாக திகழ்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமாவாசை நாளில் நாம் முன்னோர்களை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த மாசி அமாவாசை மகாசிவராத்திரிக்கு மறுநாள் வருகிறது.இன்றைய தினம் மதியம் வேளையில் நாம் இறந்த முன்னோர்களுக்கு முறையாக படையல் வைத்து வழிபாடு செய்ய மிக சிறந்த மாற்றங்களை பார்க்க முடியும்.
இன்றைய நாளில் மதியம் 11:30 மணியிலிருந்து 1:00 மணிக்குள் வீட்டில் சைவ உணவை தயார்செய்ய ஒரு பெரிய வாழை இலையில் படையல் வைக்க வேண்டும்.அந்த வாழை இலைக்கு முன்பாக ஒரு கண்ணாடியை வைத்து அந்த கண்ணாடிக்கு திருநீறு குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு தேங்காய் உடைத்து மனதார முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும்.பிறகு நம் கட்டாயமாக வீட்டிற்கு வரும் காகத்திற்கு உணவு வழங்க வேண்டும்.அவ்வாறு காகத்திற்கு உணவு அளிக்கும் பொழுது சிறிது கருப்பு எள்ளையும் தூவி வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது நாம் முன்னோர்களின் அருளை பெறுவதோடு,நமக்கு உண்டான மிக பெரிய மோசமான தோஷமும் விலகும்.மேலும்,நாம் சமைத்த உணவை குறைந்த பட்சம் 5 நபருக்காவது வழங்க வேண்டும்.
இந்த சிறிய எளிய முறையில் வழிபாடு செய்யும் பொழுது அன்றைய நாளில் முன்னோர்களின் ஆசியும் நவகிரகங்களின் ஆசியும் கிடைக்கப்பெற்று மிக சிறந்த வாழ்க்கை வாழலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |