சூரியனின் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் நவகிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் இருக்கும். அப்படியாக சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் தன்னுடைய இடத்தை மாற்றுகிறார்.
அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை கொடுக்க கூடும் என்கிறார்கள். அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியானது அவ்வளவு ஒரு நல்ல பலன்களை கொடுப்பதில்லை என்று ஜோதிட ரீதியாக சொல்கிறார்கள். அதாவது மேஷ ராசியினருக்கு இந்த சூரியனின் பெயர்ச்சியானது அவர்களுடைய ஆளுமையில் ஒரு சில சிக்கல்களை உருவாக்கி மன அழுத்தத்தை கொடுக்கக்கூடும். மேலும் அவர்கள் தொழில் ரீதியாக ஒரு சரியான முடிவை எடுக்க முடியாத ஒரு குழப்பத்தில் அவர்கள் இருக்கக்கூடிய நிலை வரலாம். தியானம் செய்வதால் இவர்கள் வருகின்ற துன்பத்தை எதிர்கொள்ள முடியும் என்கிறார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். துலாம் ராசியினருக்கு வேலையில் எதிர்பாராத குழப்பங்களும், எதிர்பாராத எதிரிகள் தொல்லையால் அவதிக்கு செல்லக்கூடிய ஒரு நிலையும் உருவாகலாம். இவர்கள் நண்பர்கள் இடையே சற்று கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மன நிம்மதியை உண்டாக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த சூரியனின் பெயர்ச்சியானது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு குழப்பத்தை உண்டு செய்ய வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இந்த மாதத்தில் கட்டாயமாக அவர்களுடைய வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வீண் வாக்குவாதமும் யாரிடமும் வாக்குறுதிகளை செய்யாமல் இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இவர்களுக்கு மனதில் குழப்பங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். இருப்பினும் இவர்கள் அதை சமாளிக்கக்கூடிய திறனை பெற்றிருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |