இன்று ஐப்பசி மாதம் குருவார கார்த்திகை- முருகர் வழிபாட்டில் மறந்தும் இதை செய்துவிடாதீர்கள்
முருகப்பெருமானுக்கு இருக்கக்கூடிய விரதங்களில் கார்த்திகை விரதம் மிகவும் முக்கியமானதாகும். இந்த விரதமானது ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் கடைபிடிக்கக் கூடிய விரதம் ஆகும். முருகப்பெருமான் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற ஒரு பெயரும் உண்டு.
இந்த நாளில் நாம் முருகப்பெருமானை நினைத்து என்ன வேண்டுதல் வைத்து விரதம் இருக்கிறோமோ? அந்த வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அப்படியாக 2025 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் நவம்பர் 6ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முருகப்பெருமானின் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது.

இந்த நாளில் நாம் விரதம் இருந்து முருகப்பெருமானை சரணடைந்து வழிபட்டால் நம்முடைய எண்ணங்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். அதோடு வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள். ஆதலால் இந்த நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது குருபகவான் உடைய அருளும் கிடைக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஜாதகர் கல்வி மற்றும் சமுதாயத்தில் நல்ல செல்வாக்கோடு வாழ்வார்கள். அவ்வாறு ஜாதகத்தில் குரு பகவான் பலம் இழந்து அல்லது மறைந்து நிலையில் இருந்தாலும் அவர்கள் கட்டாயமாக இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு குரு பகவான் மற்றும் முருகப்பெருமானுடைய அருள் கிடைக்கும்.
இந்த நாளில் முழுவதுமாக விரதம் மேற்கொள்ள முடிந்தால் விரதம் இருக்கலாம் அல்லது பால் பழம் மற்றும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம. வீட்டின் பூஜை அறையில் வைத்திருக்கும் முருகப்பெருமான் படத்திற்கு முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் படைத்து அவருடைய மந்திரங்களை நாம் பாராயணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இருப்பினும் இந்த குருவார கார்த்திகை நாளில் நாம் இந்த மூன்று விஷயங்களை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.

1. வியாழக்கிழமையில் வருகின்ற கார்த்திகை நட்சத்திரம் என்பதால் கருப்பு நிற ஆடைகளை அன்று அணிவதை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். கருப்பு சனிபகவானுக்கு உரிய நிறமாகும். குரு மங்களகாரகன் என போற்றப்படுபவர் ஆவார். அதனால் அவருக்குரிய மஞ்சள் ஆடை உடுத்துவதே அன்றைய நாளில் சிறப்பை கொடுக்கும்.
2. வீடுகளில் இந்த நாளில் ஞானத்தின் வடிவமாக போற்றப்படும் புத்தகம் காகிதம் போன்றவற்றை எடைக்கு போடுவதை தவிர்த்து விட வேண்டும்.
3. குருவார கார்த்திகை நட்சத்திர நாளன்று அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது கட்டாயமாகும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது பலிபீடத்திற்கும் மூலவர்க்கும் இடையில் செல்லக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |