2025 சுக்கிர பலம் பெறும் 3 ராசிகள் - அக்டோபர் மாதம் இவர்களுக்கு இது நடந்தே தீருமாம்
2025 அக்டோபர் மாதம் சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் செல்வமும் மிகப்பெரிய அளவில் வெற்றிகளும் மகிழ்ச்சியும் கிடைக்கப் போவதாக சொல்கிறார்கள். அப்படியாக இந்த சுக்கிர பெயர்ச்சியால் எந்த மூன்று ராசியினர் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு சுக்கிர பலத்தால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள். எதையும் ஆராய்ந்து செய்வதால் அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கப் போகிறது. ஒரு சிலருக்கு வீடுகளில் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். அக்டோபர் மாதம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி மன அழுத்தத்தை போக்க கூடியது. இவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகள் எடுக்கும் பொழுது இவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைகிறார்கள். இவர்களுக்கு வருமானத்தில் தடைகள் இருந்தால் அந்த தடைகள் யாவும் விலகி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இவர்கள் முழு ஈடுபாடு இந்த காலகட்டத்தில் கொடுத்தார்கள் என்றால் நல்ல லாபத்தை பெறுவார்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகத்தை கொடுக்க போகிறது. ஒரு சிலருக்கு வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மிகப் பெரிய அளவில் இவர்கள் சாதனை செய்ய காத்திருக்கிறார்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







