2025 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமழை காத்திருக்கிறதாம்
2025 சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 17ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசி சுக்கிர பகவானின் வீடு என்பதால் சூரியனுடன் சுக்கிரன் சேரும் பொழுது சில அற்புதமான யோகங்கள் உருவாகிறது.
மேலும் சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி அக்டோபர் 17 முதல் நவம்பர் 16 வரை குறிப்பிட்டு சில ராசிகளுக்கு நிச்சயம் ஒரு நல்ல தாக்கங்களை உருவாக்கும். அப்படியாக சூரிய பகவானின் இந்தப் பெயர்ச்சியானது எந்த 4 ராசிகளுக்கு மிகப் பெரிய அளவில் அவர்கள் வாழ்க்கையில் தாக்கங்களையும் மாற்றங்களையும் கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசிக்கு சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் ஒரு ஒளியை கொடுக்கப் போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தைப் பற்றி மிகவும் யோசித்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான விஷயங்களில் இருந்து இவர்கள் விடுபட்டு வாழ்க்கையில் தெளிவான பாதையை நோக்கி பயணம் செய்யக்கூடிய அற்புதமான காலமாக அமையப் போகிறது.
தனுசு:
தனுசு ராசிக்கு இந்த சூரியன் பெயர்ச்சியானது அவர்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கப் போகிறார்கள். செல்வாக்கு உடைய நபர்களின் அறிமுகம் இவர்களுக்கு கிடைக்கப் போகிறது. இயல்பாகவே இவர்களுடைய பேச்சுத் திறன் அதிகரித்து பேச்சு திறனால் இவர்கள் நிறைய விஷயங்கள் வாழ்க்கையில் சாதித்துக் கொள்ளப் போகிறார்கள். இந்த காலகட்டங்களில் இவர்கள் திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு நேரும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த சூரியன் பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக ஒரு மிகப்பெரிய வட்டத்தை உருவாக்கப் போகிறது. இவர்கள் கோபத்தை மாற்றி கொள்வார்கள். அதனால் அலுவலகத்தில் சுமுகமான நிலை உண்டாகும். இவர்களுக்கு வேலையில் பாராட்டுக்கள் மற்றும் அங்கீகாரம் பெறப்போகிறார்கள். சிலருக்கு நினைத்த இடத்தில் வேலை மற்றும் படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த சூரியன் பெயர்ச்சியானது அவர்களுக்கு அரசியல் ரீதியாக ஒரு சில முக்கிய நபர்களின் அறிமுகத்தை கொடுக்கப் போகிறது. இவர்கள் காதல் வாழ்க்கையில் சிறந்து விளங்கப் போகிறார்கள். ஒரு சிலருக்கு திருமணம் நடக்கக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் உள்ளது. தொழில் ரீதியாக இவர்கள் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடிய அற்புதமான மாதமாக அமைக்க போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







