2025:பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் மகரசங்கராந்தி எனப்படும் தைப்பொங்கல் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.அப்படியாக 2025 ஆம் ஆண்டு பொங்கல் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
அதாவது மக்கள் பசியாற்றும் விவசாயிகள் அறுவடை செய்து, மகத்தான மகசூலை பெற்று வாழவைக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகை இந்திய முழுவதும் கொண்டாடப்படுகிறது.இவ்வளவு சிறப்பான நாளில் மக்கள் அதிகாலை எழுந்து வீட்டு வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம் எது என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக தேவர்களுக்கு ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாத காலம் தட்சிணாய காலம் என்றும், அது இரவு பொழுதாகவும், தை முதல் ஆனி வரையிலான ஆறு மாத காலம் உத்தராயண காலம் என்றும், அது பகல் பொழுதாகவும் இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
அப்படியாக தை மாதம் பிறக்கும் முதல் நாள் தேவர்களுக்கு உத்திராயண காலம் துவங்குகிறது.மேலும்,இந்த வருடத்தில் சுக்கிர ஹோரையில் பொங்கல் வைத்தால் சுபயோக புண்ணிய பாக்கியங்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
வருகின்ற தை பொங்கலை வைக்க நல்ல நேரமாக காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும், 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை இருக்கிறது.இந்த அற்புதமான நேரத்தில் நாம் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்யலாம்.
மேலும் பொங்கல் வைக்கும் பொழுது குலவை சத்தம் போட்டு, சூரிய காயத்ரி மந்திரம் உச்சரித்து, சூரிய பகவானை நோக்கி நன்றி செலுத்தி வழிபட நம் வாழ்வில் இருள் நீங்கி சந்தோசம் பொங்கும்.
ஆதலால்,நாம் அனைவரும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தை பொங்கலை குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் சிறப்பாகவும் சந்தோஷமாவும் கொண்டாடி வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியும் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |