2 முறை தனது இடத்தை மாற்றும் புதன் பகவான்- இந்த 2 ராசிகளுக்கு தங்கம் குவிய போகிறதாம்
நவகிரகங்களில் இளவரசனாக இருக்கக் கூடியவர் புதன் பகவான். இவர் ஒருவருடைய அறிவு, பபடிப்பு, கல்வி ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கிறார். சந்திர பகவானுக்கு அடுத்தபடியாக மிக வேகமாக தன்னுடைய நிலையை மாற்றக் கூடியவர் புதன் பகவான். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை தனது இடத்தை மாற்ற உள்ளார்.
அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி புதன் பகவான் உதயமாகி அக்டோபர் மூன்றாம் தேதி துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். இந்த மாற்றம் ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பிரகாசமான ஒளியை தரப்போகிறது. அதிலும் குறிப்பாக இந்த இரண்டு ராசிகளுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்க போகிறார். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பகவானுடைய இந்த இடமாற்றம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு தெளிவை கொடுக்க போகிறார். எந்த விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்று அவர்கள் மிக புத்திசாலித்தனமாக யோசித்து ஆராய்ந்து செயல்பட போகிறார்கள். மேலும் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக பல நன்மைகள் நடக்கப் போகிறது. சிலருக்கு தங்கம் மற்றும் நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய பேச்சுத் திறமையால் வருகின்ற பிரச்சினையை புதிதாக சமாளித்து முடிப்பீர்கள்.
சிம்மம்:
சிம்மராசிகளுக்கு புதன் பகவானுடைய இந்த பேச்சு அவர்கள் வியாபாரத்தில் இவர்களை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்ல போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இருப்பவர்களுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகமும் அங்கு அதிக அளவில் லாபத்தை பெற்று சம்பாதிக்க கூடிய ஒரு வேலையும்கிடைக்கும். இவர்கள் பேச்சுத் திறமையாலே பல முன்னேற்றங்களை கொண்டு பல நட்பு வட்டாரங்களையும் இவர்கள் விரிவு செய்ய காத்திருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







