2025 செப்டம்பர்: 12 ராசிகளும் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Aug 30, 2025 10:01 AM GMT
Report

மேஷம் :

முடிந்தவரை ஒரு விஷயத்திற்காக முடிவு எடுக்கும் பொழுது நிதானமாக பல ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்:

உங்களை அறியாமல் அதிக அளவில் பணம் செலவு உண்டாகும். பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

இந்த மாதத்தில் உங்களால் முடியுமா முடியாதா என்று சந்தேகத்துக்குரிய விஷயத்தில் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள்.

கடகம்:

இந்த மாதம் வியாபாரம் மற்றும் குடும்பங்களில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அதை கோபம் கொள்ளாமல் கையாள்வது நன்மை தரும்.

சிம்மம்:

அளவுக்கு மீறிய கடன்களை வாங்காதீர்கள். அவசர தேவைக்காக கடன் வாங்கினால் கூட பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள்.

கன்னி:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரலாம்.

2025 சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

2025 சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

துலாம்:

காதலிலும் குடும்ப வாழ்க்கையிலும் உறவை முறித்துக் கொள்வதைப் பற்றி பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

உங்களுடைய ரகசியங்களை பிறரிடம் மிக கவனமாக சொல்ல வேண்டிய காலமாகும். எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு:

பயணத்தின் பொழுது உங்களுடைய உடைமைகளில் கவனம் செலுத்துங்கள். முக்கிய பொருட்களை தொலைக்க நேரலாம்.

மகரம்:

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக பேச வேண்டும். கோபத்தில் வார்த்தைகளை விடாதீர்கள்.

கும்பம்:

நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். பொருளாதாரத்தைப் பற்றி நட்புகளிடம் விவாதிக்காதீர்கள்.

மீனம்:

முடிந்தவரை நேர்மையான வழியில் செல்லுங்கள். தேவையில்லாத சில குறுக்கு வழியில் காரியத்தை எளிதாக முடிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.         

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US