2025 புதன் பெயர்ச்சி: செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தன்னுடைய நிலையை ஒவ்வொரு காலகட்டத்தில் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி அன்று சனிக்கிழமை கிரகங்களின் அதிபதியான புதன் பகவான் தன்னுடைய ராசியை மாற்றுகிறார்.
புதன் பகவானுடைய இந்த ராசி மாற்றம் பல ராசிகளுக்கு பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு புதன் பகவானுடைய இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பதையும் அதிர்ஷ்டத்தையும் தேடி கொடுக்கப்படுகிறது. .அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு புதன் பகவானுடைய இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கப்போகிறது. பல வகையில் இவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகஉள்ளது. தொழில் ரீதியாக இவர்கள் வேலையை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் நினைத்த இடத்தில் வேலையும், நினைத்த சம்பளமும் கிடைக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகக்கூடிய காலமாக அமையப்போகிறது. புத்திசாலித்தனமும் படிப்பிலும் அக்கறை செலுத்துவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு புதன் பகவானின் இந்த ராசி மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் தெளிவை கொடுத்து நல்ல முடிவை எடுக்கக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது. இவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி உடல் நிலையில் நல்ல மாற்றத்தை பெறப்போகிறார்கள். சிலருக்கு பொன் பொருள் வீடு வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். வியாபாரத்தில் இவர்கள் செழிப்பாக வாழக்கூடிய காலகட்டம். தொழிலில் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் திருப்பமாக நிறைய லாபத்தை சந்திக்கக்கூடிய காலம் ஆகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த புதன் பகவானுடைய இடம் மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள். மனம் திறந்து நண்பர்களிடமும் உறவினர்களிடம் பேசுவார்கள். வாழ்க்கையை புரிந்து வாழக்கூடிய காலகட்டமாகும். மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மன கவலைகள் விலகப் போகிறது. குழந்தைகளுடைய நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தைகளுடைய எதிர்காலம் பற்றிய பயம் விலகி குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வாய்ப்பு உருவாக போகிறது. எடுத்த காரியங்களில் வெற்றியும் வீடுகளில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கப்போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







