2025 திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா நேரலை- காணத்தவறாதீர்கள்
கார்த்திகை மாதம் என்றாலே திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிவபெருமான் நம்மக்கு ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கக் கூடிய அந்த நாளுக்காக எதிர்பார்த்து எல்லோரும் காத்திருப்போம். அன்றைய நாள் வந்துவிட்டது. ஆம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றுவதற்காக எல்லா ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிற நிலையில் பக்தர்களுடைய கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. ஈசன் ஜோதி வடிவமாக நமக்கு காட்சி கொடுத்து நமக்கு மோட்சம் அளிக்கக் கூடிய இந்த அற்புதமான மகா தீபத்தை கண்டு தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்த இன்னல்களும் வராது.
அது மட்டும் அல்லாமல் மகா தீப ஏற்றிய பிறகு வீடுகளில் நாம் 27 நட்சத்திரங்கள் ஏற்று விளக்கு ஏற்றி வீடுகளை ஒளி நிரப்ப செய்ய வேண்டும். இதனால் நம் வீடுகளில் சூழ்ந்துள்ள எல்லா தீமைகளையும் விலகும். அப்படியாக திருவண்ணாமலையில் நடந்து கொண்டிருக்கும் இந்த மகா தீபத் திருவிழாவை ஐபிசி பக்தியில் நேரலை ஒளிபரப்பாகிறது.
அதை நாம் பக்தர்கள் கண்டு களித்து ஈசனின் அருள் பெற்று இனி வரும் நாட்கள்சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |