2025 ஆம் ஆண்டு வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி தேர் திருவிழா நேரலை ஒளிபரப்பு
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்று. இங்கு இருக்கும் முருகப்பெருமானை அன்னதானக் கந்தன் என போற்றி வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக இக்கோயிலில் கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா செப்டம்பர் 07ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சப்பறத் திருவிழா இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று காலை தேர் திருவிழாவும், நாளை காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெற உள்ளது. இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் நேரலை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து நாம் முருகனின் அருளை பெறுவோம்.







