பாவம் செய்தவர்களை விட இவர்களைத்தான் மிக மோசமாக சனி பகவான் தண்டிப்பாராம்
பொதுவாகவே, சனி பகவானை பற்றி நாம் தவறான கருத்துக்கள் கொண்டிருக்கிறோம். அவர் தண்டிக்க கூடியவர், மிகவும் மோசமானவர் என்று. கொஞ்சம் கவனித்து பார்த்தால் புரியும் சனி பகவான் நமக்கு தண்டனை கொடுப்பவர் அல்ல.
அவர் நமக்கு அருமையான பாடத்தை கற்றுக் கொடுப்பவர். மேலும் சனி பகவான் ஒருவரை தண்டிக்க வேண்டும் என்றால் மிகுந்த கோபத்துடன் செய்வதில்லை. அவர் நிதானமாக சமநிலையாக ஒரு மனிதனுக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்.
அதோடு சனி பகவானுக்கு நாம் எத்தனை தவறுகள் செய்தாலும் அவர் ஒரு விஷயத்திற்கு மட்டும் மிகுந்த கோபம் வருகிறது. அது அவருக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதுதான் ஒருவர் மீது நாம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டு இணைந்து இருப்பது. சனி பகவானுக்கு எவர் ஒருவர் மீது அதிக பற்று வைக்கிறார்களோ அவர்களை அவருக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
இதை புராணங்களில் இருந்து பார்த்து வரலாம். அதாவது மகாபாரதத்திலும் கிருஷ்ண பகவான் ஒரு மனிதனின் வேதனைக்கு முதல் வேர் அவன் ஒருவர் மீது கண்மூடித்தனமாக கொண்டிருக்கும் நம்பிக்கையும் அன்பும் மட்டுமே என்கிறார். மேலும் பாவத்தை விடவும் மிக மோசமானது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பற்று.
அதனால் தான் சனி பகவான் பாவம் செய்தவர்களை தண்டிப்பதைதாண்டி, ஒருவர் மீது அதிக பற்று வைத்தவர்களை அவர் மிகவும் தண்டனைக்கு உள்ள ஆக்குகிறார். அதாவது பாவம் செய்த மனிதன் கூட தான் பாவம் செய்ததை எண்ணி மனம் வருந்தி கடந்து விடக்கூடும். ஆனால் ஒருவர் மீது கண்மூடித்தனமாக நாம் கொண்டிருக்கும் பற்று அந்த மனிதனை அவர்களிடம் இருந்து கடக்க விடாமல் மிகுந்த துன்பத்திற்கு தள்ளுகிறது.
ஆதலால் பாவத்தை விட மிக மோசமானது ஒருவர் மீது கண்முடித்தனமாக கொண்டிருக்கும் பற்று. ஆதலால் சனி பகவானுக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் சுத்தமாக பிடிப்பது இல்லை. அப்படியாக ஒருவர் மீது அதீத பற்று வைத்திருக்கிறார் என்றால் அந்தப் பற்றை உடைப்பதற்கான வேலையை சனி பகவான் முதலில் செய்கிறார்.
அவ்வாறு செய்வதின் வழியாக அந்த நபர் உண்மை நிலையை உணர்கிறார். சனி பகவானுடைய வேலையே ஒருவரை துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ செய்வதே. மேலும் நாம் செயல்களினால் செய்யும் பாவத்திற்கு எப்படி சனிபகவான் உரிய தண்டனை கொடுக்கிறாரோ, அதேபோல் நம் எண்ணங்களில் சில தவறுகள் இருந்தாலும் அதற்கான பாடத்தையும் கற்றுக்கொடுக்கிறார்.
சனி பகவான் நம்முடைய கண்ணாடி போல் நாம் என்ன செய்கிறோமோ அதற்கான பிரதிபலிப்பை அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். நமக்கு எது தேவை நமக்கு எது தேவையில்லை எந்த ஒரு விஷயத்தினால் நான் மிகவும் மனம் உடைந்து போகின்றோம் என்று கவனித்து, அந்த விஷயத்தை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டு உண்மையை உணரவைத்து, பிறகு அந்தப் பொருளையே நாம் எவ்வாறு பக்குவமாக கையாள வேண்டும் என்று ஒரு அற்புதமான பாடத்தை கற்றுக் கொடுப்பவர் சனி பகவான்.
அதோடு எவர் ஒருவர் உண்மையான அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருக்கிறார்களோ அவர்களை கர்ம வினை எதுவும் செய்வதில்லை. மேலும் எவர் ஒருவர் உண்மையான பக்தியாலும் இந்த பிரபஞ்சத்தினாலும் அவர்களுடைய உடலையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அல்லது ஏற்கனவே தூய்மைப்படுத்தி விட்டார்களோ அவர்களை சனி பகவான் ஒன்றும் செய்வது இல்லை.
ஆதலால் உண்மையான பக்தி இருந்தால் கர்ம வினை நம்மை விட்டு விலக்குகிறது, சனிபகவான் உடைய தாக்கமும் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அதனால் மனதில் தூய்மையான அன்பும் எதன் மீதும் அதிகப்பற்றும் ஆர்வமும் இல்லாமல் நம்முடைய கடமையை செய்தால் அந்த கடனை நம்மை நம்முடைய இலக்கை நோக்கி கொண்டு சேர்த்து விடும். இவ்வாறு வாழ்பவரக்ளை கர்மவினையோ சனி பகவானோ யாரும் எதுவும் செய்வது இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







