திருப்பதியில் ரத்து செய்யப்பட்ட கட்டண தரிசனம்- அதிர்ச்சியில் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக பல லட்சம் பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக, திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகின்ற பத்து நாள் வைகுண்ட வாசல் தரிசனம் செய்வதற்காக மொத்தம் 182 மணி நேர வாயில் திறந்திருக்கும் நிலையில் அதில் பக்தர்களுக்காக 164 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் ‘Dial Your EO’ என்ற திட்டத்தின் வழியாக பக்தர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் சில சேவைகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என விளக்கம் கூறியிருக்கிறார்.
குறிப்பாக முதல் மூன்று நாட்களில் ரூபாய் 300 சிறப்பு நுழைவு, எஸ்.இ.டி ஸ்ரீவாணி ஆகிய சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் vip qouta மிக அவசியமான விருந்தினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஜனவரி 2 முதல் 8 வரை பக்தர்கள் வைகுண்ட வாசல் இரண்டு வாயிலாக மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நாட்களில் சர்வ தரிசன டோக்கன்கள் திருப்பதியில் வழங்கப்படாது என்றும் சொல்கிறார்கள். மேலும் நேரில் வரிசையில் தரிசனம் பெரும் முறை மட்டுமே செயல்படுமாம். முன்பதிவு மூன்று நாட்கள் மட்டுமே ஆன்லைன் திறக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |