மகா கந்த சஷ்டி விரதம் 2025: 6 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை
மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. இந்த சஷ்டி திதி நாளில் நாம் முருகப்பெருமானை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு வாழ்க்கையில் பல்வேறு அதிசயங்களும் முருகப்பெருமானின் அருளால் பல்வேறு நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. அப்படியாக ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டிக்கு மகா சஷ்டி என்று பெயர் உண்டு.
இதை தான் கந்த சஷ்டி என்றும் சொல்வார்கள். முருக பக்தர்கள் அனைவரும் மிக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகா கந்த சஷ்டி விரதம் ஆனது முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கான மிக உகந்த நாளாக இருக்கிறது.
அப்படியாக இந்த மகா கந்த சஷ்டி விரத நாளில் நாம் விரதமிருந்து முருகப் பெருமானை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இந்த மகா கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் 48 நாள் 21 நாள் என்று அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விரதம் இருப்பார்கள்.
ஆனால் எல்லோராலும் இத்தனை நாட்கள் விரதம் கடைபிடித்து வழிபாடு செய்வதற்கான சூழல் ஏற்படுவதில்லை. ஆதலால் ஆறு நாட்கள் விரதம் இருந்து அவர்கள் முருகப்பெருமானின் அருளை பெறலாம். இந்த சஷ்டி விரதம் ஆனது ஆறு நாட்கள் கடைபிடிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 22 ஆம் தேதி அன்று தொடங்கி அக்டோபர் 27ஆம் தேதி வரை விரதம் கடைபிடித்து வழிபாடு செய்யலாம்.
விரதம் என்பதற்கு காப்பது என்று பொருள். ஆக நாம் இறைவனை மனதில் நிறுத்தி நம்முடைய வேண்டுதலை வைத்து இடைவிடாமல் அவனை வழிபாடு செய்வதன் பெயரே விரதம் ஆகும். இந்து விரதம் ஆனது பல வகைகளில் இருக்கிறது.
அதில் சஷ்டி விரதத்தில் பால் மற்றும் பழத்தை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு விரதம் இருக்கும் ஒரு முறையாகும். அதனைத் தொடர்ந்து மிளகு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளாமல் பால் மற்றும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும் விரதமும் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வெறும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு கடைபிடிக்கும் விரதமும் இருக்கிறது.
இதில் நமக்கு உடல்நிலைக்கு ஏற்ப விரதங்களை கடைபிடித்து முருகப்பெருமானின் அருளை பெறுவது அவசியம் ஆகும். மேலும் விரத காலங்களில் நம்முடைய உடல் சோர்வடையாமல் இருப்பதற்கு தண்ணீர் அதிகம் பருகி கொண்டே இருக்கும் பொழுது நம்முடைய உடலும் மனதும் குளிர்ந்து இறைவனை நெருங்குவதற்கான இன்னும் எளிதான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அப்படியாக 6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் முதல் நாள் அன்று காலை 6 மணிக்கு முன்னதாகவே விரதத்தின் காப்பு கட்டுதலை செய்து விட வேண்டும்.
விரதத்தை ஆரம்பிக்கும் போது முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு ஒரு கலசம் வைத்து அதில் வாசனை திரவியங்களை போட்டு ஒரு ரூபாய் நாணயம் வைத்து ஒரு எலுமிச்சை பழம், மாவிலை வைத்து தேங்காய் வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து கலசத்தை தயார் செய்து அதனை பச்சரிசி மேல் வைத்து காலை 6 மணிக்கு தொடங்க வேண்டும்.
இவ்வாறு காலை 6 மணிக்கு காப்பு கட்டிக்கொண்டு கந்த சஷ்டி விரதத்தை தொடங்கி தொடர்ந்து ஏழு நாட்கள் தினமும் மலர் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் படைத்து பாடல்கள் பாடி மந்திரங்கள் பாராயணம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விரதத்தை பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டி தம்பதிகள் கடைப்பிடிப்பார்கள்.
மேலும் சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் பிறந்த குழந்தைகள் ஏராளம். அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்கள் திருமண தாமதம் சந்தித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து முருகப்பெருமானின் அருளால் தனக்கு நல்ல துணை கிடைத்து வாழ்க்கையில் குழந்தைகள் குடும்பம் என்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இந்த விரதம் கண்டுபிடிப்பார்கள். அதோடு குடும்பத்தில் யாருக்கேனும் ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால் அவர்கள் குணம் அடைவதற்காகவும் இந்த வருடத்தை கடைப்பிடித்து நன்மை பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







