இன்றைய ராசி பலன்(21-10-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு ஆரோக்கியத்தில் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. துணையிடம் சற்று கவனமாக இருங்கள். உணவு பழக்கவழகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
இன்று ஒரு சிலருக்கு காலை முதல் மனதில் சிறு சங்கடம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக கவனமாக செய்யுங்கள். சொந்தங்கள் மத்தியில் பெயர் உயரும் நாள்.
மிதுனம்:
காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். முக்கிய நபரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். இன்று உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்களை தெரிந்து கொள்வீர்கள்.
கடகம்:
இன்று வாங்கிய கடனை அடைக்கக்கூடிய நாள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நன்மையான நாள்.
சிம்மம்:
தொழில் போட்டியாளர்களை கண்டு கொள்வீர்கள். வியாபாரத்தில் மிக கவனமாக சில விஷயங்களை கையாள்வது அவசியம் ஆகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கன்னி:
இன்று வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்கால வாழ்க்கையை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்:
இன்று உங்கள் மனதில் உள்ள கவலைகள் விலகும் நாள். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று நல்ல முறையில் நடக்கும்.
விருச்சிகம்:
உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
தனுசு:
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சொந்தங்கள் வீட்டிற்கு வருவதால் மகிழ்ச்சி உண்டாகும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய அற்புதமான நாள். அதிர்ஷ்டம் தேடி வரும்.
மகரம்:
இன்று வாழ்க்கையை பற்றிய முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். ஆரோக்கியத்தில் நன்மையான நாள்.
கும்பம்:
வெளியூர் பயணத்தில் தடைகள் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
மீனம்:
குடும்பத்தில் உண்டான பிரச்சனை நல்ல முடிவை பெரும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







