2026: ஆடி மாதத்தில் முக்கியமான விசேஷங்கள் விரதம் மற்றும் சுப முகூர்த்த நாட்கள்
படங்களில் தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் தெய்வீகமாக கருதக்கூடிய மாதத்தில் ஆடி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். தட்சிணாயன காலம் எனப்படும் தேவர்களின் மாலை பொழுதாக கருதப்படும் ஆடி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கும் அம்மன் வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த மாதம்.
அதோடு நம்முடைய முன்னோர்களின் அருளாசியை பெற்று பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கும் ஒரு சிறந்த மாதம். அதோடு தேவர்களின் இரவு நேரம் துவங்கு மாதம் என்பதால் இந்த மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை நாம் தவிர்ப்பது வழக்கம்.
அதாவது திருமணம் நிச்சயதார்த்தம் புது வீட்டிற்கு குடியேறுதல் வளைகாப்பு புதிய முயற்சிகள் துவங்குதல் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது போன்ற சுபகாரியங்களை இந்த மாதத்தில் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படியான ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷம் சுபமுகூர்த்தம் மற்றும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.
ஆடி மாதம் 2026 முக்கிய விசேஷங்கள் :
ஜூலை 29 ஆடி 13 புதன் சங்கரன்கோவில் ஆடி தபசு
ஆகஸ்ட் 03 ஆடி 18 திங்கள் ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 06 ஆடி 21 வியாழன் ஆடிக் கிருத்திகை
ஆகஸ்ட் 12 ஆடி 27 புதன் ஆடி அமாவாசை
ஆகஸ்ட் 16 ஆடி 31 ஞாயிறு நாக சதுர்த்தி
ஆகஸ்ட் 17 ஆடி 32 திங்கள் கருட பஞ்சமி,நாக பஞ்சமி
ஆடி மாதம் 2026 விரத நாட்கள் :
அமாவாசை ஆகஸ்ட் 12 புதன் ஆடி 27
பெளர்ணமி ஜூலை 29 புதன் ஆடி 13
கிருத்திகை ஆகஸ்ட் 06 வியாழன் ஆடி 21
திருவோணம் ஜூலை 30 வியாழன் ஆடி 14
சங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 02 ஞாயிறு ஆடி 17
சிவராத்திரி ஆகஸ்ட் 11 செவ்வாய் ஆடி 26
ஆடி மாதம் 2026 வாஸ்து நாள் :
ஜூலை 27 ஆடி 11 திங்கள் காலை 07.44 முதல் 08.20 வரை