2026: நாளை ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் எது?

By Sakthi Raj Aug 02, 2026 02:00 PM GMT
Report

ஆடி மாதத்தில் ஆடி18 நாம் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறோம். இந்த நாள் மிகவும் விசேஷமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நாம் நீர் நிலைகளில் இருந்து வழிபாடு செய்வோம். அதை போல், பெண்கள் முக்கியமாக இந்த ஆடிப்பெருக்கு பதினெட்டாம் நாள் அன்று தாலி கயிறு மாற்றக்கூடிய வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.

அப்படியாக, இன்றைய 2026 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று வருகிறது. அன்றைய தினம் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் என்னவென்று பார்ப்போம். தாலி கயிறு மாற்ற உகந்த நேரமாக காலை 6.15 முதல் 7.45 மணி வரை உள்ளது. அதுவே, மதியம் 11.45 முதல் 1.15 மணி வரை இருக்கிறது.

2026: நாளை ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் எது? | 2026 Aadi Peruku Right Time To Change Thali Thread

பெண்கள் தாலி சரடு அணியும் பொழுது தவறியும் செய்யக்கூடாத தவறுகள் என்ன?

பெண்கள் தாலி சரடு அணியும் பொழுது தவறியும் செய்யக்கூடாத தவறுகள் என்ன?

அதேபோல், மாலை 4:45 மணி முதல் 6. 15 வரை தாலிக்கயிறு மாற்றவதற்கு உகந்த நேரமாக உள்ளது. ராகு காலம், எமகண்டம் குளிகை நேரத்தை தவிர்த்து மேற்கண்ட நல்ல நேரத்தில் நாம் தாலி கயிறு மாற்றிக் கொள்ளலாம்.

தாலிக்கயிறு மாற்றும் முறை:

முதலில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை நாம் மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். பிறகு புதிய மஞ்சள் தாலிக்கயிறை வாங்கி மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இந்த விரதம் கடைபிடிக்கும் பொழுது கணவர் நீண்ட ஆயுள், குடும்ப ஒற்றுமை, செல்வம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஆகியவை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு மங்களகரமாக புதிய தாலி கயிற்றைப் மாற்றிக் கொள்ளலாம்.

2026: நாளை ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் எது? | 2026 Aadi Peruku Right Time To Change Thali Thread

ஜோதிட ரீதியாக அப்பாவிற்கு எதிரியாகும் மகன் ஜாதகம் எப்படி இருக்கும்?

ஜோதிட ரீதியாக அப்பாவிற்கு எதிரியாகும் மகன் ஜாதகம் எப்படி இருக்கும்?

இந்த நாளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

ஆடிப்பெருக்கு என்பது மிகவும் முக்கியமான நாளாக இருப்பதால் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலை பாக்கு வைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு குடும்பத்தில் தடை இன்றி சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

முடிந்தவர்கள் அன்னதானம் செய்வது புண்ணியத்தை சேர்க்கும். சுமங்கலி பெண்களுக்கு இந்த தினத்தில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ஆகியவை வழங்கி சிறப்பிக்கலாம்.

மேலும், ஆடி 18 அன்று தாலி மாற்றிக்கொண்டால் கணவன் ஆயுளுடனும் குடும்பத்தில் பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நிம்மதியான வாழ்க்கை கடக்கும் என்பது நம்பிக்கை. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US