2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும்

By Sakthi Raj May 10, 2026 06:12 AM GMT
Report

பெருமாள் வழிபாடுகளில் ஏகாதசி வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதாவது ஒரு மாதத்திற்கு இரண்டு என்று மொத்தம் 24 ஏகாதசிகள் ஒரு ஆண்டிற்கு வருகிறது. ஒரு மனிதன் செய்கின்ற எந்த ஒரு பாவ செயல்களில் இருந்து விடுபடவும் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் செய்த பாவத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.

மேலும், சமஸ்கிருத சொல்லில் ஏகாதசி என்றால் சொல்லுக்கு "ஒன்று" என்ற பொருள் ஆகும். தச என்றால் பத்து. அதனால் ஏகாதசி என்பது பதினோறாவதாக வரக்கூடிய திதியை குறிப்பதாகும். மேலும், இந்த 24 ஏகாதசிகளில் சில ஏகாதசி முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதாவது ஜேஷ்ட மாதம் என்படும் வைகாசி மாதம் துவங்குவதற்கு முன்பாக சித்திரை மாத இறுதியில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு அபரா ஏகாதசி மே 13ம் தேதி புதன் கிழமை அன்று வருகிறது.

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும் | 2026 Abara Ekadashi Date And Worship Details

கன்னி ராசியினருக்கும் இந்த ராசிக்கும் செட் ஆகவே ஆகாதாம்.. யார் தெரியுமா?

கன்னி ராசியினருக்கும் இந்த ராசிக்கும் செட் ஆகவே ஆகாதாம்.. யார் தெரியுமா?

அபரா ஏகாதசி சிறப்புகள் :

சிலருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாத நேரத்தினால் அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து சிக்கல்கள் நெருக்கடிகள், எதை எடுத்தாலும் தடை என்று இருந்து கொண்டிருக்கும். அவர்கள் கட்டாயம் இந்த அபார ஏகாதசி தினத்தன்று பெருமாளை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நல்ல பலன் உண்டு.

அபரா ஏகாதசி 2026 தேதி :

அபரா ஏகாதசி 2026 தேதிமே 13 புதன்
ஏகாதசி திதி துவக்கம்மே 12 காலை 10.37
ஏகாதசி திதி நிறைவுமே 13 காலை 09.37
பாரணை செய்யும் நேரம்மே 14 காலை 05.31 முதல் 08.14 வரை

அபரா ஏகாதசியில் கண்டிப்பாக செய்ய வேண்டியவை :

இந்த அபார ஏகாதசி தினத்தன்று பெருமாளுக்கு மஞ்சள் நிற மலர்கள் இனிப்புகள் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு துளசி இலை, பழங்கள் போன்றவை நெய்வேத்தியமாக படைத்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் கர்ம வினைகள் விலகும்.

குறிப்பாக அபார ஏகாதசி அன்று பெருமாளுக்கு கடலைப்பருப்பு, சுண்டல் படைத்து வழிபாடு செய்தால் பெருமாள் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

2026: அபார ஏகாதசி எப்பொழுது? பெருமாளின் அருள் பெற என்ன செய்யவேண்டும் | 2026 Abara Ekadashi Date And Worship Details

2026: துலாம் ராசியினருக்கு இந்த ராசியினர் தான் எதிரியாம்.. யார் தெரியுமா?

2026: துலாம் ராசியினருக்கு இந்த ராசியினர் தான் எதிரியாம்.. யார் தெரியுமா?

அதோடு ஏகாதசி தினத்தில் கைகளில் துளசி மாலை வைத்தோ அல்லது கழுத்தில் அணிந்து கொண்டு நாம் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் இருக்க கூடிய தடைகள் படிப்படியாக நீங்குவதை நாம் காணலாம்.

முக்கியமாக ஏகாதசி தினத்தன்று பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நமக்கு பெருமாளின் முழு அருளையும் பெற்றுக்கொடுக்கும். ஏகாதசி தினத்தன்று விரதம் இருப்பவர்கள் துவாதசியில் யாரேனும் ஒருவருக்கு முடிந்த அளவு அன்னதானம் வழங்கிய பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் ஏகாதசி விரதத்தின் முழு பலனையும் பெற முடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US